நடிகர் கார்த்தி ஒரு படத்திற்கு எவ்வளவு கோடி சம்பளம் வாங்குகிறார் தெரியுமா.? வெளிவந்த நிலவரம்.

0

சினிமா உலகில் வாரிசு நடிகர்களின் மகன் மற்றும் மகள்கள் கால்தடம் பதித்து வளர்ந்து கொண்டு வருகின்றனர் அந்த வகையில் சிவகுமாரின் மகன் மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் சினிமா உலகில்  சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி வருகின்றன.

அதிலும் குறிப்பாக கார்த்தி சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை சமீபகாலமாக கொடுத்துள்ளதால் அவர் தொடமுடியாத உச்சத்தை இயற்றியுள்ளார். மேலும் அவருக்கு என ரசிகர் கூட்டம் மிகப்பெரிய அளவில் உருவாகி வருகிறது தற்போது கூட இவரது கையில் பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

முதலில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக முடிந்து விட்டு டப்பிங் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து ஷங்கரின் மகளுடன் இணைந்து விருமான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். விருமன் படத்தின் ஷூட்டிங்கிலிருந்து தற்பொழுது கார்த்தி கெட்டப் உடன் இருக்கும் புகைப்படம் இணைய தள பக்கத்தில் தீயாய் பரவியது.

இப்படி இருக்கின்ற நிலையில் சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் சம்பள விவரங்களை பார்த்து வருகிறோம் அந்த வகையில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நட்சத்திரத்தை பற்றியும் அவரது சம்பளத்தை மட்டும் தான் தற்போதும் பார்க்கிறோம்.

அந்த வகையில் தற்போது பல படங்களை கையில் வைத்திருக்கும் இவர் ஒரு படத்திற்கு தற்போது 8 கோடி முதல் 10 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் கசிகின்றன. இதை அறிந்த ரசிகர்கள் கார்த்தியின் சிறந்த நடிப்புக்கு இந்த சம்பளம் ஓகே தான் என்று கூறி அவருக்கு ஆதரவாக நிற்கின்றனர்.