இதுவரை சூர்யா எத்தனை நூறு கோடி திரைப்படங்கள் கொடுத்து இருக்கிறார் தெரியுமா.! இதோ முழு லிஸ்ட்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா.  தற்போது வாரிசு நடிகர்களாக அறிமுகமான பலர் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாமல் தள்ளாடி வருகிறார்கள். ஆனால் வெற்றிகரமாக தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா.

இவர் தொடர்ந்து சினிமாவில் பல வெற்றி படங்களை தந்து அஜித், விஜய் என்று அனைவரையும் ஓவர்டேக் செய்து சூப்பர் ஸ்டார் அளவிற்கு வளர்ந்திருந்தால் அந்த வகையில் இவர் செய்த சிறு சிறு தவறுகளினால் தனது சினிமாவில் இருந்த மொத்த மார்க்கெட்டையும் வீணாக்கி கொண்டார்.

இவர் ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு திரைப்படங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அந்த வகையில் இவர்கள் பல வெற்றிப் படங்களாக அமைந்தது.  சினிமாவில் பிரபலமடைந்து விட்டோம் என்ற எண்ணத்தில் இவர் பெரிதாக கதையில் கவனம் செலுத்தாமல் விட்டதால் தற்பொழுது இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறாததால் தள்ளாடி வருகிறார்.

இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அந்த வகையில் முதலில் இவர் நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து பெரும் சாதனை படைத்தது அதுமட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் அனைவராலும் பாராட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் சிங்கம் 2. இந்த திரைப்படத்தில் முரட்டுத்தனமான போலீஸ்  கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து இருந்தார். அதோடு இவருடைய கட்டு கோப்பான உடலமைப்பு, மீசை என்று அனைத்தும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்தது. இந்த திரைப்படமும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

இதனைத் தொடர்ந்து சிங்கம் 3 திரைப்படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு பல கோடி பட்ஜெட்டில் சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 24. இத்திரைப்படத்தை சயின்ஸ் பிக்சன் தயாரித்திருந்தது. இத்திரைப்படமும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது ஆனால் இத்திரைப்படம் பல கோடி பட்ஜெட்டில் உருவாக்க பட்டது என்பதால் போட்ட முதலை கூட எடுக்க முடியவில்லை என்று கூறியிருந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து சில ஆண்டுகள் கழித்து தற்போது தான் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சூரரைப்போற்று. இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதோடு சூர்யாவிற்கு சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஒரு படமாக அமைந்தது. இத்திரைப்படமும் ஓடிடி வழியாக வெளியாகி கோடிக்கணக்கில் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version