வலிமை படம் போல “பொங்கல்” நாளில் இதுவரை வெளியான அஜித் படங்கள் எத்தனை தெரியுமா.? லிஸ்ட் இதோ.

தல அஜித் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் வலிமை இந்த திரைப்படத்தை ஹச்.வினோத் இயக்கியுள்ளார் மேலும் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் போனி கபூர் தயாரித்து உள்ளார் இந்த திரைப்படமும் முதலில் தீபாவளிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதில் இருந்து பின்வாங்கி தற்போது பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக சமீபத்தில் அறிவித்தது.

ரசிகர்கள் படத்தை தீபாவளிக்கு எதிர்பார்த்தனர் ஆனால் எதிர்பாராத விதமாக தற்பொழுது பின்வாங்கிய இருந்தாலும் நல்ல நாளில் வர உள்ளதால் ரசிகர்கள் இந்த செய்தியை சமூக வலைதள பக்கத்தில் பரப்புவதோடு கொண்டாடி வருகின்றனர். இதைத் தொடர்ந்து தற்போது வலிமை படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டை எதிர் நோக்கி காத்து கொண்டு இருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க வலிமையுடன் விஜய்யின் பீஸ்ட் படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளதால் இரண்டு படங்களும் மீண்டும் ஒரு முறை நேருக்கு நேர் மோத உள்ளன இதனால் ரசிகர்கள் இந்த ரேஸில் யார் ஜெயிப்பார் என எதிர்பார்த்து தற்போது  காத்திருக்கின்றனர். இந்நிலையில் அஜித் நடித்த எந்த படங்கள் பொங்கலுக்கு வெளியாகி உள்ளன என்பதை பற்றிதான் தற்போது நாம் பார்க்க உள்ளோம்.

அஜித் நடித்த முதல் படமான வான்மதி படம் 1990ஆம் ஆண்டு உங்களுக்கு தான் ரிலீஸ் ஆனது அதை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியானரெட், ஆழ்வார், பரமசிவம், வீரம், விசுவாசம் போன்ற படங்களும் பொங்கல் தினத்தன்று தான் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

குறிப்பாக விசுவாசம், வீரம் போன்ற படங்கள் நல்ல கலெக்ஷனை அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது. முதலெழுத்து வி சம்பந்தப்பட்ட படங்கள் அனைத்தும் அஜித்துக்கு சூப்பர் டூப்பர் ஹிட் என்பதால் வலிமையை திரைப்படமும் பொங்கல் தினத்தன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றியை இருக்கும் என கருதப்படுகிறது.

Leave a Comment