இஷான் கிஷன் மீண்டும் ஃபார்ம் – க்கு திரும்பியது எப்படி தெரியுமா.? அவரே சொன்ன.. சூப்பர் தகவல்.

0

ஐபிஎல் போட்டியை தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் அந்த வகையில் முதல் மூன்று இடத்தை பிடித்து விட்ட நிலையில் நான்காவது இடத்திற்கு தற்போது கேகேஆர் மற்றும் மும்பை இந்தியன்ஸ்  ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு பிளே ஆப் செல்லும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது அதற்கு ஏற்றபடி நேற்று இந்த போட்டியிலும் சிறப்பாக நடந்தேறியது. டாஸ் வென்ற ரோகித்சர்மா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார் இதனை அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில்9 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்களை எட்டியது.

இதனையடுத்து களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் கிஷன் ஆகியவர்கள் ஆரம்பத்திலேயே அதிரடி காட்டி 8 ஓவர்களில் 94 ரன்கள் எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றியை ருசித்தது. இஷான் கிஷன் 25 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அசத்தினார் தில் 3 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோசமான பாம்பில் இருந்து   கிஷன் ஃபார்ம்முக்கு திரும்பியுள்ளார் இதுகுறித்து அவர் கூறுகையில் கிரிக்கெட் உலகில் ஒரு பேட்ஸ்மேனாக ஏற்றத்தாழ்வுகள் இருப்பது வழக்கம் இதுபோல் தான் எனக்கும் இருந்தது ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடும் இடையில் என்னால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை இருப்பினும் எங்களது டீமேட் மற்றும் கேப்டன் ஆகியவர்கள் எங்களுக்கு ஆதரவு கொடுத்தனர்.

நிச்சயம் உன்னால் முடியும் என எண்ணினார் இதனை எடுத்து நானும் கடினமான பயிற்சிகளை மேற்கொண்டேன் ஒரு கட்டத்தில் பொல்லார்ட் என்னிடம் வந்து நீ பழைய மேட்சுகளில் எப்படி அடித்து ஆடினாய் அந்த வீடியோக்களை உனக்கு ஒரு நல்ல தெளிவு கிடைக்கும் என கூறினார்.

அவர் சொன்னது போலவே நானும் போய் பார்த்தேன் அதில் எனது ஆட்டத்தை எப்படி ஆடினேன் என்பது எனக்கு புரிந்தது அதனையே இந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக செய்து காட்டினேன் என கூறினார்.மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது கேகேஆர் தோற்றால் நிச்சயம் போய்விடலாம் என கனவு கண்டு வருகிறது.