தென்னிந்திய சினிமாவில் மூத்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினி அடுத்தடுத்து தன்னுடைய திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்த வருகிறார்.இவருடைய நடிப்பில் கடைசியாக அண்ணாத்த திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக தோல்வியடைந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றினை பெற்றது.
இப்படிப்பட்ட நிலையில் ரஜினி நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களில் வயதான காரணத்தினால் பெரிதாக சுறுசுறுப்பு இல்லை என விமர்சனம் செய்து வருகிறார்கள். இருந்தாலும் ரஜினி தன்னுடைய அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் அதாவது தற்பொழுது இவர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இத்திரைப்படத்தினை நெல்சன் திலீப் குமார் அவர்கள் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரஜினி நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் தோல்வியடைந்து வந்துள்ள நிலையில் ஜெயிலர் திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது இதற்கு முன்பு நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளிவந்தது.
இப்படிப்பட்ட நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது சென்னையில் பெரிதாக செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது மேலும் இந்த திரைப்படத்தில் தற்போது தொடர்ந்து ஏராளமான பிரபலங்கள் ஒப்பந்தமாகி வருகிறார்கள்.அந்த, வகையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர்கள் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் சரவணன் அவர்கள் இந்த திரைப்படத்தில் புதிதாக இணைந்துள்ளார்கள் மேலும் இவர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதன் பிறகு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள் நடித்து வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் இவர் இந்தத் திரைப்படத்தின் நடிப்பதற்கு முக்கிய காரணம் பற்றிய தகவல் வைரலாகி வருகிறது.
அதாவது, இவர் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுதே சேலம் சூரமங்கலம் ரஜினி ரசிகர் மன்றத்தில் சேர்ந்தாராம். பிறகு அதே ரசிகர் மன்றத்திற்கு தலைவராகி உள்ளார் மேலும் ரஜினியின் திரைப்படம் ரிலீஸ் ஆனால் அவர் தலைமையில் தான் கேக் வெட்டி அமர்க்களமாக கொண்டாடப்படுமாம். இப்படிப்பட்ட நிலையில் ரஜினியின் தீவிர ரசிகர் சரவணன் என்பதற்காக பட குழுவினர்கள் இவருக்கு ரஜினியுடன் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்பை கொடுத்துள்ளார்கள் என கூறப்படுகிறது.