பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மாடல் அழகி அக்ஷரா ஹீரோயினாக நடித்த தமிழ் படம் எது தெரியுமா.? ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் போஸ்டர்.

சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் சீசனாக நடத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 5 ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முதல் இரண்டு சீசன்களில் சினிமா பிரபலங்களே பெரிதும் போட்டியாளராக கலந்து கொண்டனர்கள்.

அதுவும் நல்ல வரவேற்ப்பை பெற்றதைத் தொடர்ந்து பின் வரும் சீசன்களில் ஒரு மாறுதலுக்காக வெவ்வேறு துறைகளில் இருந்தும் போட்டியாளர்களை களமிறங்கினர். தற்போது பிக்பாஸ் சீசன் 5 சிறப்பாக நடந்து 50வது நாளை தொட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சில தினங்களுக்கு முன்பு தான் வைல்டு கார்டு என்ட்ரியாக இந்த வீட்டில் இரண்டாவது வாரத்திலேயே வெளியேறிய அபிஷேக் ராஜா மீண்டும் வந்துள்ளார்.

மேலும் உடனடியாக மற்றொரு வைல்டு கார்டு என்ட்ரி இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர்களில் ஒருவர் அக்ஷரா ரெட்டி  இவர் இதற்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான வில்லா டு வில்லேஜ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். மேலும் இவர் மாடலிங் துறையிலும் சிறப்பாக கலக்கி வந்தனர்.

தற்போது இவர் பிக்பாஸ் வீட்டில் சிறப்பாகவும் சைலண்டாகவும் விளையாடி வருகிறார். மேலும் அக்ஷரா ரெட்டிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகி உள்ளன. இவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகளும் கண்டிப்பாக இவரை தேடி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

akshara

இந்த நிலையில் அக்ஷர ரெட்டி பற்றி பலருக்கும்  தெரியாத ஒரு உண்மை என்னவென்றால் அவர் தமிழ் சினிமாவில் 2006 ஆம் ஆண்டு புதுமுக நடிகர் ஒருவருடன் இணைந்து ஹீரோயினாக தீண்ட தீண்ட என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.  தற்போது இந்த செய்தி இணையதளத்தில் பேசு பொருளாக பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version