சீரியலில் தான் தான் கிங் என நிரூபித்த சன் தொலைக்காட்சி.! TRPயில் எந்த சீரியல் முதலிடத்தில் தெரியுமா.?

சின்னத்திரையில் பல அறிமுக நடிகைகள் புதிய புதிய சீரியல்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் இவர்கள் நடித்துவரும் சீரியல்களும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகி விடுகிறது.

அதிலும் குறிப்பாக சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எல்லா சீரியல்களும் மக்களுக்கு மிகவும் பிடித்ததாக தான் திகழ்ந்து  வருகிறது அதற்கு காரணம் இந்த சீரியலில் நடிக்கும் நடிகைகள் தங்களது இயல்பான நடிப்பை காட்டி மக்கள் மனதில் எப்படியாவது இடம் பிடித்து விடுகிறார்கள்.

மேலும் பல சீரியல்கள் TRPயில் நம்பர் 1 இடத்தை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என புதிய புதிய திருப்பங்களை சீரியல்களில் கொண்டு வருகிறார்கள் அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் மக்களுக்கு மிகவும் பிடித்த சீரியலாக மட்டும் அமையாமல் இந்த சீரியலில் நடித்து வரும் நடிகை ஷபானா ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார்.அதேபோல் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலும் மக்களுக்கு மிகவும் பிடிக்கும் இந்த சீரியலும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் வாரம் வாரம் BARC india நிறுவனம் தொலைக்காட்சியில் எந்த திரைப்படம் மற்றும் சீரியல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பதை கணக்கிட்டு வாரம் வாரம் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்கள் அந்த வகையில் கடந்த வாரத்திற்கான முழு விவரமும் தற்போது வெளியாகியுள்ளது.

இதில் வழக்கம்போல சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் முதலிடத்திலும் மற்றும் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாரதிகண்ணம்மா சீரியல் மற்றும் டாப் ஐந்தில் எப்பொழுதும் இருக்கும் சன்டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வானத்தைப் போல ஆகிய சீரியல்கள் இருக்கிறது அதுமட்டுமல்லாமல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விஜய்யின் ஜில்லா திரைப்படம் மற்றும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் ஒளிபரப்பான காஞ்சனா 2 திரைப்படங்களும் இடம்பெற்றுள்ளது.

Roja
Roja

மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இதனை சமூக வலைதளப் பக்கங்களில் ஷேர் செய்து வருவது மட்டுமல்லாமல் வாரம் வாரம் எப்படி ரோஜா சீரியல் மட்டும் முதலிடத்தில் இருக்கிறது என பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment