உங்கள் ரேஷன் கார்டை தவறுதலாக தொலைத்து விட்டீர்களா உடனே இதை செய்யுங்கள்.! கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது

ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது தமிழ்நாட்டு மக்களுக்கு. இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்புகளுக்கு பிறகு ரேஷன் கார்டு வாங்க, பெயர் மாற்றம், முகவரி மாற்றம் செய்ய கூட்டம் அலைமோதிக் கொண்டு இருக்கிறார்கள் இது ஒருபுறம் இருந்தாலும் மிகவும் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய செய்தியாக பார்க்கப்படுவது பயணம் செய்யும் பொழுது தவறுதலாக ரேஷன் கர்டைதொலைத்து விட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதுதான்.

ஒருவரின் கவனக்குறைவு ஏற்படும் போது மட்டுமே இது நிகழும் ஒரு வேளை அப்படி தெரியாமல் ரேஷன் கார்டை நீங்கள் தொலைத்து விட்டால் என்ன செய்யவேண்டும் தெரியுமா உடனே ஆன்லைனில் மிகவும் ஈஸியாக அப்ளை செய்யலாம். உங்கள் கையில் செல்போன் இருந்தால் போதும் வெறும் 20 நிமிடத்திலேயே நீங்கள் இதை செய்து முடிக்கலாம்.

முதலில் தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று லாகின் செய்ய வேண்டும்.(https://www.tnpds.gov.in/)  நீங்கள் பதிவு செய்து வைத்திருக்கும் தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் ஒரு குறுந்தகவல் வரும் அதனைக் கொண்டு உங்கள் சுயவிவரத்தை உள்ளீடு செய்யவும்.

இப்பொழுது நீங்கள் டிஎன்பிடிஎஸ் என்ற ஸ்மார்ட் கார்ட் பதிவிறக்கம் மற்றும் அச்சிடுவதற்கான டேப்பை பார்க்கலாம் கூடுதல் வசதி என்னவென்றால் பெயர் நீக்குதல் தேதி மாற்றத்தில் ஆகிய வசதிகளும் இருக்கிறது. உங்களுடைய மொழியை தேர்வு செய்து அதன் பிறகு பிடிஎப் பைல் சேமிக்க அதன்பிறகு அந்த பக்கத்தை பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும்.

பிறகு உங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு சென்று இந்த நகலை சமர்ப்பித்தால் போதும் உடனே உங்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும். இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து அவருக்கும்  பயன்படுமாறு செய்யவும்.

Leave a Comment