“பாரதிகண்ணம்மா” சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? இப்ப வந்த வினுஷா தேவி தான் டாப்.

சின்னத்திரை தொலைக்காட்சிகள் மக்களை தன் பக்கம் ஈர்க்க புதிய கதைகளத்துடன் பல்வேறு சீரியல்களை கொடுத்து வருகின்றன. அதில் மக்களின் ஃபேவரட் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா தொடர். இந்த தொடர் கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேலாக எடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் இறுதி கட்டத்தை நோக்கி  விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் இந்த சீரியலில் நடித்து வந்த பிரபலங்கள் தற்போது மக்களிடையே பெரிதும் பிரபலமடைந்து உள்ளன. அந்த வகையில் இந்த சீரியலில் முதலில் கதாநாயகியாக நடித்து வந்த ரோஷினி ஹரிப்ரியன் இந்த தொடரின் மூலம் பிரபலமாகி பின்பு அவருக்கு வேறு சில வாய்ப்புகளின் காரணமாக இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார்.

மேலும் தற்போது ரோஷினி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பதில் தற்போது அவர் சாயலில் உள்ள வினுஷா தேவி என்ற மாடலிங் பிரபலம் நடித்து வருகிறார்.  தற்போது மக்களின் பேராதரவைப் பெற்று ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா இன்னும் சில நாட்களில் நிறைவடைய உள்ளதாக சமூக வலைதளப் பக்கங்களில் செய்தி கசிந்துள்ளன.

ஆம் அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பாரதி கண்ணம்மா ப்ரோமோவில் இன்னும் ஐந்து நாட்களில் எனக் குறிப்பிடப்பட்டது. அதனை அடுத்து ரசிகர்கள் பலரும் இன்னும் 5 ஆண்டுகளில் சீரியல் நிறைவடைய உள்ளது என  கூறி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் பிரபலங்களின் ஒரு நாளைய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதில் இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வரும் அருண்பிரசாத் ஒரு எபிசோட்டிற்கு ரூபாய் 20000 சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகின. இவரை அடுத்து ஹீரோயின் வினுஷா தேவி ஒரு எபிசோடிற்கு இவரும் ரூ 20000 சம்பளமாக வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீரியலில் சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும்  ரூபாஸ்ரீ ஒரு நாளைக்கு ரூ 12000 வாங்குவதாக வெளியாகி உள்ளது.

இந்த சீரியலின் வில்லி பரினா ஒரு எபிசோட்டிற்கு ரூ10000 வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதில் துணை கதாநாயகியாக நடித்து வரும் அஞ்சலி ஒரு நாளைக்கு  ரூ 5000 சம்பளம் வாங்குவதாக வெளியாகியுள்ளது. இந்த சீரியலில் கண்ணம்மாவின் சித்தியாக நடித்து வரும் செந்தில்குமாரி ஒரு நாளைக்கு 5000 வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment