விஜய் படத்தை பார்க்காதீர்கள் இந்து கடவுளை இழிவுபடுத்துகிறார் – மதுரை ஆதீனம் பேட்டி.

vijay
vijay

தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய் இப்பொழுது தனது 66 வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். விஜய் படங்கள் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தினாலும் அதேசமயம்  பல சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளது.

குறிப்பாக ஒரு சில படங்களில் அரசியல் மற்றும் தேவையில்லாத பஞ்ச் டயலாக்குகளை வைத்துள்ளது ஒரு சில கட்சியினரை கோபப் படுத்துவது வழக்கம். மேலும் விஜயின் படங்கள் எப்பொழுதெல்லாம் வெளியாகிறது அப்போது எல்லாம் சர்ச்சையில் சிக்கி தவிப்பது வழக்கம்.

சொல்லப்போனால் ரிலீஸ் தேதியை  அறிவித்து விட்டாலும் படத்தில் உள்ள குறைகளை கண்டறிந்து படத்தின் மேல் கேஸ் போடுவது மற்றும் படத்தை தள்ளி வைப்பது போன்ற வேலைகள் அதிகம் விஜய் படங்களுக்கு நடந்து உள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் மதுரை ஆதினம் நடிகர் விஜய் படத்தை பார்க்காதீர்கள் என கூறி பேசியுள்ளார்.

அவர் இவ்வாறு சொல்ல என்ன காரணம் என்பதை முழு விலாவாரியாக பார்க்கலாம். விஜயின் படங்களில் இந்துக்களை இழிவுபடுத்தும் போன்ற கருத்துக்களை பெற்று உள்ளதாக கூறியுள்ளார்.  உனக்கு பூ சாதனா செடி அழுகுது.. என் காதலிக்கு சாதனா செடி எல்லாம் சிரிக்கிறது..  என்ற விஜய் வசனம் பேசும்  படம் ஒன்றை பார்த்தேன்.

இப்படி நமது கடவுளை இழிவு படுத்துகிறார்கள். இதை சொன்னால் எல்லோரும் என்னை சங்கி என சொல்கிறார்கள். இவர் இவ்வாறு பேசியது சமூக வலைதள பக்கத்தில் அந்த செய்தி வேகமெடுத்து உள்ளதோடு மட்டுமல்லாமல் பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.