ராஜ்கிரண் திரைப்படத்தோடு என் திரைப்படத்தை வெளியிட வேண்டாம்.? ரிலீஸ் தேதியை மாற்றிய ரஜினி எதற்காக தெரியுமா.?

அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் முக்கியமான நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது திரைப்படங்கள் தொடர்ந்து பல விதமான வெற்றிகளை கொடுத்து வருகிறது அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் வெளியாகும் எல்லா திரைப்படங்களுக்கும் இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து நன்றாக வரவேற்பார்கள் என்பது நமக்கு தெரிந்ததுதான்.

பொதுவாகவே ரஜினியின் திரைப்படம் வெளியாக போகிறது என்றால் அந்தத் தேதியில் ரஜினியின் படம் மட்டும்தான் வெளியாகும் மற்ற நடிகர்கள் தங்களது படத்தின் தேதிகளை மாற்றி வைப்பார்கள் ஏனென்றால் ரஜினியின் படம் அதிகம் வசூல் செய்வது தான் காரணம்.

ஆனால் ரஜினி ஒரு நடிகரின் படத்தை பார்த்துவிட்டு தனது திரைப்படத்தின் தேதியை மாற்றி வைத்துள்ளார் என தகவல் கிடைத்துள்ளது தமிழ் சினிமாவில் அந்த காலத்திலேயே ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்ந்தவர் ராஜ்கிரன் இவர் அந்தக் காலத்தில் முதன் முதலாக ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியது பல பத்திரிக்கைகளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி ரஜினியின் வீரா மற்றும் ராஜ்கிரணின் எல்லாமே என் ராசாதான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நேரத்தில் வெளியாக இருந்துள்ளது இதனைக் கேட்ட ரஜினி தன்னுடைய வீரா படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைக்க தயாரிப்பாளர் இடம் கேட்டுள்ளார்.

ஏனென்றால் ராஜ்கிரணின் படமும் அந்த காலத்தில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக பல கோடி வசூல் செய்து சாதனை படைத்ததால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டு திரைப்படங்கள் ஒன்றாக வெளியானால் அது வசூல் ரீதியாக வெற்றி அடையாது என அந்த தயாரிப்பாளரிடம் கூறியதாக தகவல் கிடைத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் ராஜ்கிரணுக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள் அதனாலேயே அவரது திரைப்படம் வெளியானால் நல்ல வசூல் செய்து சாதனை படைக்கும் அதற்கு பின்பு நாம் ஒரு சில வாரங்கள் கழித்து நம்முடைய திரைப்படத்தை வெளியிடலாம் என ரஜினி கூறியுள்ளாராம்.

veera
veera

என்ன காரணம் என்பது தெரியவில்லை ராஜ்கிரன் நடித்து வந்த எல்லாமே என் ராசாதான் திரைப்படத்தின் படப்பிடிப்பு கொஞ்சம் இருந்ததால் ரிலீஸ் தேதியில் படத்தை வெளியிட முடியவில்லை இதனை அறிந்த ரஜினி ரிலீஸ் தேதியை குறித்து வைத்திருந்த நாளிலேயே திரைப்படத்தை படக்குழுவினர்கள் வெளியிட்டுள்ளார்கள்.இதனையடுத்து இந்த தகவல் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment