திமுக MLA அன்பழகன் கோரோனா பாதிப்பால் காலமானார்.!

anbhazhagan
anbhazhagan

கொரோனா என்ற ஒற்றைச் சொல்லில் உலகை தற்பொழுது ஆட்டிப்படைத்து வருகிறது இதனை தடுக்க ஐக்கிய நாட்டு சபையில் மருத்துவக் குழுவும் மற்றும் பல நாடுகள் ஒன்றிணைந்து இதன் தாக்கத்தை தடுக்க போராடி வருகின்றனர் இருப்பினும் இதற்கான மருந்து இதுவரையிலும் கண்டுபிடிக்க முடியாததால் தற்போது வரை மக்கள் மற்றும் மருத்துவர்கள் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகின்றனர் மேலும் இதுவரையிலும் பல லட்சம் பேர் இறந்துள்ளனர்.

மக்களிடம் எப்பொழுதும் இணையும் மற்றும் பொதுவெளியில் நல்ல தொடர்பில் இருந்தவர் எம்எல்ஏ அன்பழகன் இவருக்கு சமிபத்தில்  கொரோனா தொற்று  ஏற்பட்டது.இதன் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார் அவரது ஆதரவாளர்கள் மற்றும் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த நிலையில் மேலும் அதிர்ச்சியை செய்தி ஒன்று வெளியாகியுள்ளது எம்எல்ஏ அன்பழகன் அவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தார் இது தற்பொழுது எல்லோரையும் பெரிய அளவில் பாதித்துள்ளது.

அரசியலையும் தாண்டி அவர் சினிமாவிலும் ஒரு காலத்தில் ஊடுருவி இருந்தார் என்று கூற வேண்டும் அந்த வகையில் இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ஆதிபகவான் என்ற திரைப்படத்தை தயாரித்தவர் என்பது குறிபிடத்தக்கது.