இதனால்தான் விவாகரத்து முதல் முறையாக பேட்டியில் உண்மையை உடைத்த டிடி.!

சமீபகாலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக தொகுப்பாளினிகள் ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்கள், அந்தவகையில் தொகுப்பாளினி டிடி மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளவர், இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அடிமை என்றே கூறலாம் அந்த அளவுக்கு இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை போரடிக்காமல் கலகலப்பாக கொண்டு செல்வார்.

மேலும் இவர் 20 வருடங்களுக்கு மேலாக தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார், இவர் என்னதான் சினிமா துறையில் வெற்றி பெற்றாலும் தனது சொந்த வாழ்க்கையில் தோல்விதான். தான் காதலித்து கரம்பிடித்த கணவரை சில மாதங்களிலே விவாகரத்து செய்தார்.

இதற்கு காரணம் டிடி இரவு நேரப் பார்ட்டியில் கலந்து கொள்வதும் ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றுவதுமென இருப்பதாக ஒரு தகவல் கசிந்தது, இப்படி இருக்க தொகுப்பாளினி டிடி பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ரிலேஷன்ஷிப் என்பது இரண்டு நபர் சம்பந்தப்பட்ட விஷயம் சில நேரங்களில் அது உடைந்து விடலாம்.

அப்படி உடைந்தால் நிச்சயம் காயம் ஏற்படும், அந்த காயத்தில் இருந்து மீண்டு வர வேண்டும் அவர்களுக்கு ஆல் த பெஸ்ட் சொல்லி விட்டு அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட வேண்டும், கடைசியாக ஒரு மெசேஜ் அனுப்பினேன் அவ்வளவு தான் என்னுடைய இந்த வாழ்க்கைக்கு கடவுளுக்கு நன்றி சொல்லுகிறேன் என தெரிவித்துள்ளார்.

டிடியின் இந்த நிலைமையை ரசிகர்களின் மனதில் சோகத்தை ஏற்படுத்தியது.

Leave a Comment