பிக்பாஸ் அபிநய் மற்றும் அபர்ணாவுக்கு விவாகரத்தா.! அவர்களே வெளியிட்ட தகவல்..

0
bigg boss 5
bigg boss 5

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 5 கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் தான் அபிநய். இவர் சினிமாவில் நடிக்க வேண்டுமெனறு மிகவும் ஆர்வமாக இருந்தாலும் சரியான ஒரு அங்கீகாரம் கிடைக்காத காரணத்தினால் திரைப்படங்கள் நடிக்காமல் இருந்து வந்தவர். இவர்  நடித்திருந்தாலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

இவர் திரை குடும்பத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரி அவர்களின் பேரன் ஆவார். இப்படிப்பட்ட நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைந்தார்.

இவர் இந்நிகழ்ச்சி தொடர்ந்த முதல் வாரமே நாமினேஷன் அவர் தேர்வு செய்யப்பட்டார்.பிறகு தொடர்ந்து அனைத்து வாரங்களும் நாமினேஷன் இடம் பெற்று வந்தவர். பல வாரங்கள்   பிக்பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்தார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் ஏதாவது ஒரு காதல் கதை இடம் பெறுவது வழக்கம்.

அதேபோல் அபிநய் மற்றும் பாவனிக்கு இடையே காதல் இருப்பதாக சர்ச்சை உருவானது. இந்த வகையில் அதிகமாக பவானியிடம் பேசுவது தனது நேரங்களில் அவருடன் செலுத்துவது என்பதை வழக்கமாக வைத்திருந்தார். எனவே மற்ற போட்டியாளர்கள் அனைவரும் அபிநய் பவானியை காதலிக்கிறார் என்று கூறி வந்தார்கள்.

இவ்வாறு  77 கழித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த அபிநய் வெளியேறினார் பிறகு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இப்படிப்பட்ட நிலையில் அபிநய் மனைவி அபர்ணா தனது சமூக வலைதளப் பக்கத்தில் கணவன் பெயரை நீக்கினார்.

இதனால் அவர்களுக்கிடையே விவாகரத்தாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வந்த நிலையில் தற்போது விவாகரத்து குறித்து ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் விவாகரத்துக்குப் பின்பு பெண்கள் ஜீவனாம்சம் தர வேண்டும் இதுவே ஒரு ஆண் பெண் சமத்துவம் என குறிப்பிட்டுள்ளார் அந்த பதிவு தற்போது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

abarna
abarna