வலிமை படம் வெற்றியா.. தோல்வியா.. பிரச்சனைக்கு முடிவு கட்டிய வினியோகஸ்தர்.! வாங்க பார்க்கலாம்.

அஜித் நடிப்பில் ஹச். வினோத் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி வெற்றி நடை கண்ட திரைப்படம் வலிமை. இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன், சென்டிமெண்ட், திரில்லர் கலந்ததாக படமாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் படத்தை ப்பார்த்து கொண்டாடினர்.

இந்த திரைப்படமும் இதுவரை 200 கோடிக்கு மேல் வசூல் வேட்டையை அள்ளியதாக பல தகவல்கள் வெளியாகியிருந்தாலும் அது உறுதிப்படுத்தப்படவில்லை இதை அறிந்துகொண்ட தயாரிப்பாளர் போனிகபூர் வலிமை படம் 200 கோடிக்கு மேல் வசூலை அள்ளி விட்டது என அதிரடியாக அறிவித்தார். இதனால் ரசிகர்கள் பெருமூச்சுவிட்டு கொண்டாடினார்.

இப்படி தகவல்கள் வெளிவந்தாலும் ஒரு சில தயாரிப்பாளர்கள் அதை ஒத்துக் கொள்ள மறுக்கின்றனர். அந்த வகையில் இயக்குனரும் பிரபல தயாரிப்பாளருமான தராஜன் சினிமா உலகில் நடக்கும் ஒரு சில விஷயங்களை பேட்டிகளில் பகிர்ந்து வருகிறார் அந்த வகையில் அண்மையில் பேட்டி ஒன்றில் வலிமை திரைப்படம்.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள ஏரியாக்களில் வலிமை படம் நஷ்டத்தை கொடுத்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அது எல்லாம் உண்மை கிடையாது நான் சொல்வதுதான் உண்மை என செங்கல்பட்டு விநியோகஸ்தர் வலிமை படம் குறித்து பேசியுள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது.

வலிமை படம் தான் இந்த ஆண்டின் முதல் அதிக வசூல் செய்த திரைப்படம் என்றும் வலிமை படத்தால் எந்த ஒரு நஷ்டமும் ஏற்படவில்லை வலிமை சூப்பர்ஹிட் திரைப்படம் என்றும் வெளிப்படையாக கூறினார். அவர் கூறுவதை வைத்துப் பார்த்தால் வலிமை திரைப்படம் எந்த ஏரியாவிலும் தோல்வியை சந்திக்க வில்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

 

Leave a Comment

Exit mobile version