பட வாய்ப்பு தேடி சோர்ந்து போன இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து தூக்கி விட்ட அஜித்.. நன்றி மறக்காத இயக்குனர்கள்..

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்குமார்க்கு  என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. அதை போல் முன்னணி நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என அனைவரிடமும் அஜித்திற்கு என்று தனி மரியாதை உண்டு.

இதற்கு காரணம் ஆரம்ப காலகட்டத்தில் வளர்ந்து வரும் காலத்தில் அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களையும் உயர தூக்கி விட்ட நல்ல உள்ளம் அஜித்திற்கு உண்டு. அந்த வரிசையில் தற்பொழுது முன்னணி இயக்குனராக இருக்கும் எஸ்.ஜே சூர்யா, ஏ ஆர் முருகதாஸ் ஆகியோர்களுக்கு வாய்ப்பு கொடுத்தவர் தல அஜித்.

அது மட்டுமே இல்லாமல் சரவண சுப்பையா, சிங்கம்புலி, சரண் ஆகியோருக்கும் பட வாய்ப்பு கொடுத்து தூக்கி விட்டார் அஜித்.

காதல் மன்னன் – சரண்

1998 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியாகிய காதல் மன்னன் திரைப்படம் அப்பொழுதைய காலகட்டத்தில் மிகவும் பிரபலமான திரைப்படமாக மாறியது பாலச்சந்தரிடம் உதவியாளராக இருந்த சரண் இத் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக மாறினார். இந்த திரைப்படத்தில் அஜித் உடன் இணைந்து மறைந்த நடிகர் விவேக் இசையமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதன் ஆகி வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சரணுக்கு அஜித் அமர்க்களம், அசல், அட்டகாசம் ஆகிய திரைப்படங்களை இயக்க வாய்ப்பு கொடுத்தார்.

எஸ் ஜே சூர்யா – வாலி

அஜித் திரை பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் வாலி 1999 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை எஸ் ஜே சூர்யா அவர்கள் இயக்கினார் அவருக்கு முதல் திரைப்படம் அஜித் முதன்முறையாக ஆண்டி ஹீரோவாக நடித்தது இந்த திரைப்படத்தில் தான். அஜித்திற்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார் அது மட்டும் இல்லாமல் ஜோதிகாவும் இந்த திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது மட்டுமல்லாமல் புதிய சான்ட்ரோ கார் வாங்கி கொடுத்து சிறப்பித்தார் இன்று எஸ் ஜே சூர்யா முன்னணி இயக்குனராக மட்டுமல்லாமல் முன்னணி நடிகராகவும் வலம் வருகிறார்.

ஏ ஆர் முருகதாஸ் – தீனா

அஜித்தை முதன்முறையாக ஆக்சன் ஹீரோவாக மாற்றிய திரைப்படம் தீனா இந்த திரைப்படத்தின் மூலம் ஏ ஆர் முருகதாஸ் இயக்குனராக அவதாரம் எடுத்தார். எஸ் ஜே சூர்யாவிடம் உதவியாளராக இருந்து அதன் மூலம் அஜித்தின் கால் சீட்டை வாங்கினார் ஏ ஆர் முருகதாஸ் இறுதியாக அஜீத் ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் வெளியான தீனா திரைப்படம் பட்டையை கிளப்பியது அஜித்திற்கு தல என்ற பட்டமும் இந்த திரைப்படத்தின் மூலம் தான் கிடைத்தது. படத்தில் அஜித்துடன் இணைந்து லைலா, சுரேஷ்கோபி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படத்தை இயக்கியதற்காக ஏ ஆர் முருகதாஸுக்கும் கார் வாங்கி கொடுத்து சர்ப்ரைஸ் செய்தார் அஜித்.

சிட்டிசன் – சரவண சுப்பையா, ரெட் – சிங்கம்புலி

அதேபோல் அஜித் காரியரில் சிட்டிசன் மற்றும் ரெட் திரைப்படம் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது சிட்டிசன் திரைப்படத்தின் மூலம் சரவண சுப்பையா இயக்குனராக அறிமுகமானார் அதேபோல் ரெட் திரைப்படத்தின் மூலம் சிங்கம் புலி இயக்குனராக அறிமுகமானார் . இயக்குனராக இருவருக்கும் அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்கள் அமையவில்லை என்றாலும் தொடர்ந்து நடிகர்களாக வலம் வருகிறார்கள். அதிலும் அஜித்தும் சிங்கம் புலியும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1990களில் பல உதவி இயக்குனர்கள் அஜித்தின் கால்ஷீட்டுக்காக காத்திருந்தார்கள் அதற்கு காரணம் அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது தான்.

மேலும் பல பேட்டிகளில் இந்த இயக்குனர்கள் அஜித் தான் முதலில் வாய்ப்பு கொடுத்தது என கூறியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.