முதல் பாகம் மெகாஹிட்!! 2ஆம் பாகத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்.!! இயக்குனரே நடித்து திரையரங்கு திறந்ததும் ரிலீஸாகயிருக்கும் திரைப்படம்.

0
directors-
directors-

director who act hero as his movie: இயக்குனர் சந்தோஷ் குமார் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு கௌதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், வைபவி சாண்டில்யா, சந்திரிகா ரவி, நடிப்பில் வெளியான திரைப்படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. இந்த திரைப்படம் வெளிவந்து இளைஞர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது அதுமட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது .

இந்த திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆனது, அதனைத் தொடர்ந்து தமிழில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு எடுத்தனர். ஆனால் எந்த ஹீரோவும் நடிக்க முன்வராததால் இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் தானே நடித்து உள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு இரண்டாம் பகுத்து எனவும் பெயர் வைத்துள்ளனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில் தற்போது சென்சார் வேலையும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த திரைப்படம் ஜனவரி மாதமே எடுத்து முடிக்கப்பட்ட தாம் . படக்குழு இந்த படத்தை கோடைக்கு ரிலீஸ் செய்யலாம் என முடிவெடுத்து இருந்தார்களாம். கொரோனா காரணமாக தற்போது தள்ளி போய்விட்டது. இந்த திரைப்படம் தியேட்டர் திறந்தவுடன் ரிலீஸாகும் என கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த படம் முதலாம் பாகத்தை விட முற்றிலும் வேறுபட்ட கதையை கொண்டதாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

இந்த இரண்டாம் குத்து திரைப்படத்தில் ஹீரோயினாக மீனாள், கரிஷ்மா, ஆக்ரிதி  மற்றும் சில முக்கிய கதாபாத்திரங்களில் பிக்பாஸ் டேனி, லொள்ளு சபா சுவாமிநாதன், லொள்ளு சபா மனோகர், சாம்ஸ், மொட்ட ராஜேந்திரன், ரவி மரியா,  சிங்கம் புலி போன்றோர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில் இது ஒரு அடல்ட் காமெடி திரைப்படம். இது ஒரு தப்பான ஜானர் இல்லை என்று நான் நினைக்கிறேன் எனவும் கூறியிருந்தார்.