இயக்குனர் வினோத் தனது பிறந்தநாள் பேட்டியில் அஜித் பற்றி என்ன கூறியுள்ளார் பாருங்கள்.!!

0

director vinoth said about ajith: அஜீத்தை இயக்கும் இயக்குனர் வினோத்துக்கு நேற்று பிறந்த நாள். எனவே அஜித் ரசிகர்கள் அனைவரும் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.இயக்குனர் வினோத் இயக்கிய நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்த நடிகர் அஜித்.

அவரின் இயக்கம் பிடிக்க பின்பு மீண்டும் அவரின் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இயக்குனர் வினோத் பேட்டி ஒன்றில் அஜித் பற்றி பேசியுள்ளார்.

அது என்னவென்றால் அஜித் அவர்கள் எப்போதுமே தன்னை சுற்றி பாசிட்டிவிட்டி இருக்க வேண்டும் என்று நினைப்பார். பாசிட்டிவான மனிதர்களை மட்டுமே  தன்னுடன் இருக்க அனுமதிப்பார். அதுமட்டுமல்லாமல் அஜித் தன் குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்.

அத்தோடு சேர்த்து தன் ரசிகர்கள் மீதும் அதிக அக்கறை காட்டுவாராம். மேலும் ரசிகர்கள் சினிமா மட்டுமே உலகம் என இருந்து விடக்கூடாது . தங்களுக்கு என ஒரு குடும்பம் உள்ளது தங்களது குடும்பத்தை பார்க்கவேண்டும் அது மட்டுமல்லாமல் அவர்களது வாழ்க்கையை சரியாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார் என வினோத் பேட்டியில் கூறியுள்ளார். தற்போது இந்தப் தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.