சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் இயக்குனர் விஜய்!! காரணம் இரண்டாவது மனைவி.!

0
director-a.l.vijay-tamil360newz.jpg
director-a.l.vijay-tamil360newz.jpg

Director Vijay floats in happiness! By the second wife the child is born: அஜித், த்ரிஷா நடிப்பில் வெளியான கிரிடம் என்ற திரைப்படத்தினை இயக்கி தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் ஏ எல் விஜய். இதனை தொடர்ந்து இவர் மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தலைவா, சைவம், தேவி, வனமகன் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் ஏ எல் விஜய் தெய்வத்திருமகள் திரைப்படத்தை இயக்கிய போது அதில் நடித்த அமலாபாலுடன் காதலில் விழுந்தார். பின்னர் இதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.

விவகாரத்து பெற்ற பின் பெற்றோர்களின் விருப்பத்துக்கு ஏற்ப பொது நல மருத்துவரான ஐஸ்வர்யா என்பவரை கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டார்.

அதனை தொடர்ந்து இன்று காலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. எனவே இயக்குநனர் விஜய் மகிழ்ச்சியில் உள்ளார். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.