மீண்டும் ஒரு காதல் கதையுடன் இயக்குனர் விக்னேஷ் சிவன்..! இந்த படத்துல ஹீரோ யாருன்னு தெரியுமா..?

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விக்ரம் இவர் சமீபத்தில் தன்னுடைய ஆசை மகன் துருவ் விக்ரம் என்பவரையும் சினிமாவில் நடிக்க வைத்து அழகு பார்த்து வருகிறார். அந்தவகையில் தெலுங்கில் மிக மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டியின் மெஹஹிட் திரைப் படத்தின் ரீமேக்கில் தமிழில் நடித்து அறிமுகமானார்.

இவ்வாறு வெளிவந்த திரைப்படம் தான் ஆதித்யா வர்மா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது மட்டுமில்லாமல் இவருடைய நடிப்பு பலராலும் பேசப்பட்டது. அந்தவகையில் இத்திரைப்படத்தின் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களையும் இவர் கவர்ந்து விட்டார் என்றே சொல்லலாம்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் துருவ் விக்ரம்  தனது தந்தையுடன் இணைந்து மகான் என்ற திரைப்படத்தில்  நடித்துள்ளார் இந்த திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள்தான் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இத் திரைப்படத்தில் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பரியேறும் பெருமாள் கர்ணன் போன்ற திரைப்படங்களை இயக்கிய மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் இவர் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது அந்த வகையில் இவர் இத்திரைப்படத்தில் ஒரு கபடி வீரராக நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு அடுத்ததாக நயன்தாராவின் ஆசை காதலன் விக்னேஷ் சிவன் இயக்கும் ஒரு திரைப்படத்தில் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

thuruv vikram-1

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படமானது ஒரு ரொமாண்டிக் கலந்த காதல் திரைப்படமாக இருக்கும் என வெளிவந்த செய்தியின் அடிப்படையில் இந்த திரைப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் வெளியான பிறகு வெளியிடப்படும் என கூறியுள்ளார்கள்.