நல்ல நேரம் பிறந்தது என நயன்தாராவுடன் கோவாவில் தனது பிறந்தநாளை கொண்டாடும் விக்னேஷ் சிவன்.!! வைரலாகும் புகைப்படம்.

0

director vignesh shivan birthday:இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை வைத்து நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர். இவர் அந்த படத்தை இயக்கியபோது அதில் நடித்த நயன்தாராவை காதலித்தார்.

நயன்தாராவும் அவரை காதலித்தார். இவர்கள் இருவரும் அடிக்கடி வெளியே செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் படப்பிடிப்பு எதுவும் இல்லாததால் இருவரும் ஒன்றாகவே இருந்து வந்தனர். மேலும் வெளியே எங்கும் செல்ல முடியாமல் ஒரே வீட்டில் இருந்தனர். அதை தொடர்ந்து தற்போது ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக  கேரளாவுக்கு தனி விமானத்தின் மூலம் இருவரும் சென்றனர்.

அதன் பின்னர் அங்கிருந்து கோவாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இவர்கள் கோவாவிற்கு சென்றதை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவின் புகைப்படத்தை பதிவிட்டு நீண்ட நாட்களுக்குப் பிறகு  சுற்றுலா பயணம் வந்துள்ளோம் என கூறியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் இரண்டு நாட்களுக்கு முன்பு நயன்தாராவின் அம்மாவின் பிறந்த நாளை கோவாவில் குடும்பத்தோடு கொண்டாடி மகிழ்ந்தனர். அதனை தொடர்ந்து இன்று இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது பிறந்த நாளை கோவாவில் நயன்தாரா மற்றும் தனது அம்மாவுடன் குதுகலமாக கொண்டாடியுள்ளார்.

அங்கு அவர் நயன்தாராவுடன் தற்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பிறந்தநாள் கொண்டாட்டம் என கூறி உள்ளார். தற்போது அந்த  புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

wikkiofficial
wikkiofficial