தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகிய அத்தனை படங்களும் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பு இருக்கும். வெற்றிமாறன் பொதுவாக எந்த ஒரு விஷயத்திற்காகவும் அவ்வளவாக கோபப்பட்டது கிடையாது. ஆனால் ஒரு நிகழ்ச்சியில் மிகவும் கோபப்பட்ட கிளம்பியுள்ளார் அதனால் பலருக்கு அதிர்ச்சி கொடுத்த வந்துள்ளது.
இயக்குனர் வெற்றிமாறன் படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் சமீபகாலமாக ஒரு சில திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். அந்தவகையில் வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் தங்கத் தலைவன்.
இந்த திரைப்படத்தில் சமுத்திரகனி நடித்துள்ளார் . மேலும் சங்கத்தலைவன் திரைப்படத்தின் விழாவில்தான் வெற்றிமாறன் மேடையை விட்டு இறங்கி உள்ளார் அது பலருக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. அதற்கு காரணம் என்னவென்றால் நடிகர் மாரிமுத்து தான்.
நடிகர் மாரிமுத்து படத்தை பற்றி பேசுகிறேன் என்ற பெயரில் படத்தை பற்றி அனைத்து விஷயத்தையும் வெளியே கூறிவிட்டார். அதுமட்டுமில்லாமல் தேவையில்லாமல் அரசியலும் பேசிவிட்டார். அரசியல் சார்ந்த பல விஷயங்களை பேசியதால் வெற்றிமாறன் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதனால் வெற்றிமாறன் மாரிமுத்து விடமிறுந்து மைக்கை வெடுக்கென பிடிங்கி விட்டார்.
அதன்பிறகு மாரிமுத்துவிடமும் தயவு செய்து நீங்கள் பேசவேண்டாம் என கோபமாக கூறிவிட்டு மேடையை விட்டு இறங்கி விட்டாராம். தான் தயாரித்துள்ள படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் இவ்வாறு கோபப்பட்டது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்னும் மாரிமுத்து மீது மிகவும் கோபமாக தான் இருக்கிறார் வெற்றிமாறன். வெற்றிமாறன் கையில் சிக்கினால் மாரிமுத்து அதோகதிதான் போல.
