இயக்குனர் வெற்றிமாறனின் அடுத்த படத்தின் ஹீரோ இவர்தான்.! கொல மாஸாகா உருவாகப் போகும் புதிய திரைப்படம்.!

தமிழ் சினிமாவில் வித்யாசமான கதைக் களத்தை திரைப்படமாக உருவாக்கி வெற்றி கண்டவர் இயக்குனர் வெற்றிமாறன்,  இவர் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். வெற்றிமாறன் இயக்கிய திரைப்படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்று விடுகிறது.

வெற்றிமாறன் காமெடி நடிகர் பரோட்டா சூரியை வைத்து புதிய திரைப்படத்தை இயக்க இருக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியானது அதேபோல் இந்த திரைப்படத்தை எல்ரெட் குமார் தயாரிக்க இருக்கிறார் எனவும் இசைஞானி இளையராஜா இசையமைக்க இருக்கிறார் எனவும் தகவல் கிடைத்தது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் விஜய்சேதுபதி ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளன, அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பாரதிராஜா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

மேலும் சில சந்தர்ப்ப சூழ்நிலையால் பாரதிராஜா இந்த திரைப்படத்தில் இருந்து விலகிவிட்டார்,  அதனால் தமிழ் சினிமாவில் வில்லன் நாயகனாக நடித்து வரும் கிஷோர் பாரதிராஜா படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

Vijay_Sethupathi
Vijay_Sethupathi

ஆனால் விஜய் சேதுபதிதான் பாரதிராஜாவின் வயதான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் வயதான கதாபாத்திரத்திற்கு விஜய்சேதுபதி தான் செட் ஆகும் என கூரப்படுகிரதாம்.

இவர் ஏற்கனவே வடச்ச்சென்னை  திரைப்படத்தில் வெற்றிமாறன் விஜய் சேதுபதி கூட்டணி அமைக்கப் பட்டதும் சில காரணங்களால் அதிலிருந்து விலகியதும்   அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

Leave a Comment