மீண்டும் வட சென்னையை வைத்து வெப் சீரியஸில் களமிறங்கும் இயக்குனர் வெற்றி மாறன்.! அப்போ படம் வேறலெவல் தான்.

வெள்ளித்திரையில் பல ஹிட் அடித்திருக்கும் திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துவரும் இயக்குனர்களில் ஒரு முக்கியமான இயக்குனர் வெற்றிமாறன் இவர் தனுஷை வைத்து இயக்கிய பொல்லாதவன்,ஆடுகளம்,அசுரன் போன்ற பல படங்களை இயக்கிய ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர்.

மேலும் இவர் இறுதியாக தனுஷை வைத்து அசுரன் என்ற திரைப்படத்தை இயக்கிருந்தார் அந்த திரைப்படம் தற்போது தேசிய விருது பெற்றது என்பது அவருக்கு மிகவும் பெருமையாக தான் இருக்கிறது.

இதனையடுத்து வெற்றிமாறன் சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து நாவலை மையமாக ஒரு திரைப்படத்தை தட்டி தழுவி எடுத்து வருகிறாராம் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்துஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஒரு திரைப்படமும் அடுத்ததாக சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்க உள்ளாராம்.

இந்த இரண்டு திரைப்படத்திற்கும் நடுவில் வடசென்னையை வைத்து ஒரு வெப் சீரியஸ் தொடரை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது ஆம் அமீரின் ராஜன் கதாபாத்திரத்தை வைத்து ஒரு வெப்சீரிஸ் வெற்றிமாறன் எடுக்க உள்ளதாக தகவல் கிடைத்தது மட்டுமல்லாமல் இந்த வெப்சீரிஸ் OTT யில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

இந்த படப்பிடிப்பு வட சென்னையில் கூடிய சீக்கிரம் நடைபெறும் என தகவல்  கிடைத்துள்ளது.

Vetrimaaran
Vetrimaaran

Leave a Comment