நாசுக்காக தளபதி 68 அப்டேட்டை அறிவித்த வெங்கட் பிரபு.! என்ன நண்பா ரெடியா…

Vengat Prabhu: தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி அன்று திரையரங்களில் வெளியாக இருக்கும் நிலையில் இதனை அடுத்து ட்ரெய்லர் அக்டோபர் 5ம் தேதி வெளியாகிறது. இவ்வாறு ஒரு புறம் லியோ படத்தின் ரிலீஸுக்கான பணிகள் நடைபெற்று வர மறுபுறம் தளபதி 68 படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தொடர்ந்து விஜய்யின் அடுத்த படத்தின் அப்டேட்டுகளை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படத்தை 7 கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி உள்ளிட்ட ஏராளமான திரை பட்டாள்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டிரைலர் வருகின்ற அக்டோபர் 5ம் தேதி அன்று வெளியாக இருப்பதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே இதற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்து வரும் நிலையில் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 68 பற்றிய அப்டேட்டை இயக்குனர் வெங்கட் பிரபு கொடுத்துள்ளார்.

இது குறித்து தனது அதிகாரப்பூர்வமான எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், உங்களின் அன்பு மற்றும் வாழ்த்துக்களுடன் தளபதி 68 துவங்கியது இது மகிழ்ச்சியான ரோலர் கோஸ்டர் ரைட் ஆக இருக்கப் போகிறது லியோ வெளியீட்டைத் தொடர்ந்து அனைத்து புகைப்படங்கள் மற்றும் இதர அப்டேட்டுகள் வழங்கப்படும் கடவுள் கருணை மிக்கவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. லியோ படத்தில் ரிலீசுக்கு பிறகு தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில் இதற்கான பணிகளில் வெங்கட் பிரபு ஈடுபட்டு வருகிறார். லியோ படமே வெளியாகாமல் இருக்கும் நிலையில் தளபதி 68 படத்தின் அப்டேட் ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தி வருகிறது. மேலும் இப்படத்தில் சினேகா நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டு வரும் நிலையில் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.