எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த குணசேகரன்.. ரகசியத்தை உடைத்த இயக்குனர் திருச்செல்வம்.. கதையை மாற்றியதற்கு காரணம் இதுதான்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் இந்த சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து சில வாரங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார். எனவே இதனை அடுத்து யார் இனிமேல் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்பொழுது முதன்முறையாக எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் குணசேகரன் கேரக்டர் குறித்து மனம் திறந்துள்ளார். எதிர்நீச்சல் சீரியலுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது இவ்வாறு இதற்கு முக்கிய காரணம் குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த மாரிமுத்து தான். இவருடைய நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர தற்பொழுது டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது.

இவ்வாறு நன்றாக ஓடிக் கொண்டிருந்த இந்த சீரியலில் குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த மாரிமுத்து சில வாரங்களுக்கு முன்பு டப்பிங் பேசிக் கொண்டிருக்கும் பொழுது உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற நிலையில் பிறகு சிகிச்சை பலனின்றி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

இது திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பிறகு யார் குணசேகரன் கேரக்டரில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அந்த நிலையில் சில நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அந்த நடிகர்கள் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருவதனால் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க முடியாமல் போய் உள்ளது

இந்நிலையில் குணசேகரன் குறித்து தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த இயக்குனர் திருச்செல்வம் கூறியதாவது, குணசேகரன் என்றால் அது மாரிமுத்து சார் ஒருவராக மட்டும் தான் இருக்க முடியும். மாரிமுத்து சார் ஆரம்ப காலகட்டத்தில் இயக்குனர் வசந்த் சாரிடம் வேலை பார்க்கும் பொழுது அவர் மாரிமுத்து பெயர் பழசா இருக்கு அதனால உங்க ஊர் பக்கத்தில் பிரபலமாக இருக்கும் சேதுபதி என்ற பெயரை வைத்துக் கொள்ளலாம் என்று மாற்றி இருந்தாராம்.

ஆனால் அந்த பெயர் கொஞ்சம் கூட மாரிமுத்து சாருக்கு பிடிக்கவே இல்லையாம் முதல் படத்தில் பெரிய அளவில் அந்த பெயர் பிரபலம் அடையாததால் பிறகு தன்னுடைய மாரிமுத்து என்ற பெயரையே வைத்துக் கொண்டாராம். அவருடைய அம்மா, அப்பா தனக்கு வைத்த பெயரை நாம எப்படி மாற்றுவது என்று யோசித்துக் கொண்டிருந்தார். யாராவது அவரை சேதுபதி என்று கூப்பிட்டால் கூட அவருக்கு கோபம் தான் வருமாம்.

ஆனால் எதிர்நீச்சல் மூலமாக அவரை மாரிமுத்து என்பதை விடவும் ஆதி குணசேகரன் என்று பிரபலமடைந்து விட்டார். அப்பொழுது கூட சார் நானும் இப்போ உங்க பெயரை மாற்றி விட்டேன் என்று சொன்னேன் அவர் சந்தோஷமாக சிரித்துக் கொண்டார். இது நான் மட்டுமல்ல மக்களுக்கும் அவருக்கு கொடுத்த அங்கீகாரம் அதனால் அவர் இந்த ஆதி குணசேகரன் பெயரை அவ்வளவு நேசித்தார். அதனால் இந்த பெயர் அவருக்கு மட்டும் தான் சரியாக இருக்கும் என்றுதான் கதையில் சிறு திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது.

அதே நேரத்தில் ஆதி குணசேகரன் இல்லை என்று ஒரேடியாக முடிக்க முடியாது என்பதனால் அவர் வீட்டை விட்டு போய்விட்டார் என்பது போன்ற கதையைக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறோம். பின்னர் வரும் காலகட்டத்தில் கதையில் அவருடைய பெயர் மீண்டும் வரலாம் என்றும் அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் திருச்செல்வம் கூறியுள்ளார்.