விஜயகாந்தை காதல் ஹீரோவாக மாற்றிய இயக்குனர் சுந்தராஜன்.! கேப்டன்னுக்கு எத்தனை ஹிட் படங்கள் கொடுத்துள்ளார் தெரியுமா.?

90 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் பல்வேறு விதமான ஜாம்பவான்கள் இருந்தாலும் அவர்களை எல்லாம் தனது ஆக்சன் மற்றும் காதல் போன்ற படங்களில் மூலம் உட்கார வைத்தார் நடிகர் விஜயகாந்த்.

அதுவும் வருடத்திற்கு 1, 2 படங்களை கொடுப்பதல்ல வருடத்திற்கு முடிந்தால் நூறு அல்லது நாற்பது, ஐம்பது போன்ற படங்களில் நடித்து மற்ற நடிகர்களை வாயை பிளக்க வைத்தார் அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் மிக ஈடுபாடு இருந்ததோடு தனக்கென ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை தமிழ் சினிமாவில் படைத்திருந்தார்.

சிறப்பான கதை இருந்தால் அந்த எந்த இயக்குனர் என்று பார்க்காமல் படத்தை கொடுத்து விடுவார் அப்படித்தான் தமிழ் சினிமாவில் பல்வேறு இயக்குனர்களை வளர்த்து விட்டவர்களில் முதன்மையானவராக விஜயகாந்த் இருக்கிறார். தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர் நடிகையுடன் நெருங்கிய நண்பராக வலம் வருபவர் விஜயகாந்த்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் காமெடியனாகவும் இயக்குனராகவும் வலம் வரும் சுந்தரராஜன் விஜயகாந்தின் மிக நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் சுந்தர் ராஜன் தற்போது தமிழ் சினிமாவில் பெருமளவு படங்களை இயக்கவில்லை என்றாலும் காமெடியனாக நடித்து வருகிறார் ஆனால் ஒரு காலகட்டத்தில் விஜயகாந்தை வைத்து ஏழு திரைப்படங்களை இவர் எடுத்துள்ளார்.

ஆக்ஷன் ஹீரோவாக இருந்த விஜயகாந்தை காதல் ஹீரோவாக மாற்றிய பெருமை சுந்தரராஜனுக்கு உண்டு.

அந்த வகையில் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான அந்த 7 திரைப்படங்கள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.

1984 ஆம் ஆண்டு சுந்தரராஜன் விஜயகாந்த் கூட்டணியில் வெளியான “வைதேகி காத்திருந்தாள்” திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியுள்ளது நீண்ட நாட்கள் இந்த படம் ஓடியது.

1986 ஆம் ஆண்டு “அம்மன் கோயில் கிழக்காலே” படம் விஜயகாந்த் கேரியரில் மிக சிறப்பான படமாகப் பார்க்கப்பட்டது அதன்பிறகு “தழுவாத கைகள்” மற்றும் “காலையும் நீயே மாலையும் நீயே”  மற்றும் “எங்ககிட்ட மோததே” போன்ற பல்வேறு வெற்றி படங்களாகும்.

1994 ஆசைமச்சான் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக மாறியது. 1995ஆம் ஆண்டு “காந்தி பிறந்த மண்” என்ற படத்தை சுந்தரராஜன் விஜயகாந்த் நடித்த படம் பேரையும், புகழையும் அவருக்கு கைகொடுத்தது.

Leave a Comment