திருமணத்தை வைத்து அதிதி சங்கர்க்கு செக் வைத்த சங்கர்.. அதுக்குன்னு இப்படி ஒரு கண்டிஷனா.?

Aditi Shankar: தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து வரும் இயக்குனர் சங்கர் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது கமலஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தினை உருவாக்கி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் இந்தியன் 2 படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் இயக்குனர் சங்கரின் இளைய மகளாக சினிமாவிற்கு அறிமுகமாகிய தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருபவர் தான் நடிகை அதிதி சங்கர்.

இவர் கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். இதனை அடுத்து சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாவீரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நிலையில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

அந்த வகையில் இரண்டு திரைப்படங்களிலும் இவருடைய கேரக்டர் பக்காவாக அமைந்தால் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இவ்வாறு தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வரும் அதிதி சங்கர் மேலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். இந்நிலையில் தனது மகளுக்கு இயக்குனர் சங்கர் ஸ்ட்ரிட்டான கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளாராம்.

அதாவது இன்னும் இரண்டு ஆண்டுக்குள் எவ்வளவு படங்களில் நடிக்க வேண்டுமோ நடித்துக் கொள் ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அதிதி சங்கருக்கு சங்கர் கண்டிஷன் போட்டுள்ளார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை அடுத்து தற்பொழுது அதிதி சங்கர் நடிகர் அதர்வாவின் தம்பி ஹீரோவாக சினிமாவிற்கு அறிமுகமாகும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தினை விஷ்ணுவர்தன் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Exit mobile version