எல்லை மீறிய பட்ஜெட்டில் படம் எடுக்கத் துடிக்கும் இயக்குனர் சங்கர்..! கதாநாயகனாக நடிக்க துடிக்கும் முன்னணி நடிகர்கள்..!

தமிழ் சினிமாவில் மிகப் பெரும் அளவு பொருட்செலவு மற்றும் முதலீடு போட்டு திரைப்படம் இயக்குவதில் வல்லவர் என்றால் அது இயக்குனர் சங்கர்தான் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் சமீபத்தில் ராம்சரனை வைத்து ஆர்சி 15 என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இவ்வாறு பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தினை தில் ராஜி அவர்கள் தான் தயாரித்து வருகிறார் இந்நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலை ஆனது மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் சங்கர் அவர்கள் தனது கனவு திரைப்படத்தினை ஆயிரம் கோடி பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பொதுவாக சங்கர் இயக்கும் திரைப்படங்கள் அனைத்தும் பிரமாண்டமாக இருப்பது மட்டுமில்லாமல் காட்சிகள் ஒவ்வொன்றும் பிரமிக்க வைக்கும் அளவிற்கு இருப்பது வழக்கம் தான் எனில் அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் புது புது தொழில்நுட்பங்களை பயன்படுத்தி திரைப்படம் இயக்குவதன் காரணமாக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இவருடைய திரைப்படத்தை பார்க்க இருப்பார்கள்.

சமீபத்தில் இவருடைய இயக்கத்தில் வெளிவந்த ரஜினியின் திரைப்படமான எந்திரன் திரைப்படத்தில் இரண்டாம் பாகம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்த நிலையில் தற்பொழுது ஷங்கர் அவர்கள் நீறுக்கு அடியில் ஒரு திரைப்படத்தை இயக்குவதற்காக திட்டமிட்டுள்ளார்.

மேலும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அறிவியல் கலந்த திரைப்படமாக இருக்கும் எனவும் இந்த திரைப்படத்திற்கான பட்ஜெட் ஆயிரம் கோடி ஆகும் எனவும் கூறப்படுகிறது இதில் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் மற்றும் ராம் சரண் ஆகிய இருவர்களும் இணைந்து நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த திரைப்படம் பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு மிக சில நாட்களில் வெளியாகும் என சங்கர் கூறியது மட்டுமில்லாமல் சமீபத்தில் தன்னுடைய அடுத்தடுத்த திரைப்படத்தில் அதிக அளவு கவனம் செலுத்தி வருகிறார். இதை தொடர்ந்து இந்தியன் 2 திரைப்படம்  படப்பிடிப்பு ஆரம்பிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

அதே போல தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி கண்ட அன்னியன் திரைப்படத்தையும் இயக்குனர் சங்கர் அவர்கள் ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார்.  மேலும் சமீபத்தில் சங்கர் உருவாக்க ஆயிரம் கோடி திரைப்படத்தில் தயாரிப்பாளர் யாராக இருப்பார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகிறார்கள்.

Leave a Comment