இந்தியன் 2 படத்தை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் எடுக்கப் போகும் பிரம்மாண்ட படம்.? பட்ஜெட் மட்டுமே இத்தனை கோடியா..

0
shankar
shankar

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தென்னிந்திய சினிமா உலகில் பல படங்களை இயக்கிய வெற்றி கண்டுள்ளார். இப்பொழுது தெலுங்கில் நடிகர்  ராம்சரணை வைத்து RC 15 திரைப்படத்தை விறுவிறுப்பாக எடுத்து வருகிறார்  மறுபக்கம் தமிழில் நடிப்பிற்கு பெயர் போன உலகநாயகன் கமலஹாசனை வைத்து இந்தியன் 2..

திரைப்படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் மிகப் பிரமாண்ட பொருளை அளவில் தயாரித்து வருகிறது இந்தியன் 2 திரைப்படத்தில் கமல் ஒரு வயதான கெட்டப்பில் நடிக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க ஒரு சமூக அக்கறை கலந்த ஒரு திரைப்படமாக உருவாகி வருகிறது.

அதே சமயம் இந்த படத்தில் செண்டிமெண்ட், ரொமான்ஸ் போன்ற சீன்களும் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் 2 திரைப்படத்தில் கமலுடன் கைகோர்த்து பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, ஐஸ்வர்யா ராஜேஷ், சார்ஜ் மரியன், டெல்லி கணேசன், ஆடுகளம் நரேன் போன்ற பல நட்சத்திர நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தை வெற்றிகரமாக இயக்குனர் ஷங்கர் எடுத்து முடித்துவிட்டு அடுத்ததாக வேள்பாரி நாவலை தழுவி.. ஒரு பிரம்மாண்ட வரலாறு படத்தை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது அந்த நாவலை திரைப்படமாக எடுக்க ரைட் எல்லாம் அவர் வாங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது அந்த படத்தை இதுவரை யாரும் எடுக்காத பட்ஜெட்டில் எடுக்க இருக்கிறாராம்.

velpaari
velpaari

ஆம் ஆயிரம் கோடி பொருள் செலவில் அந்த படத்தை உருவாக்க இருக்கிறாராம் அதுவும் அந்த பாடம் மூன்று பாகங்களாக வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லையே  ஆனால் இது குறித்து இயக்குனர் ஷங்கர் அதிகாரப்பூர்வமாக சொல்லும் பதிலே உண்மையாக இருக்கும்..