5 சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ள இயக்குனர் ஷங்கர்.! அதுவும் எந்தெந்த திரைப்படங்கல் தெரியுமா.?

தமிழ் சினிமா உலகில் அதிக பட்ஜெட் போட்டு படங்களை இயக்கும் இயக்குனர்களில் முக்கியமான இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர் இவரது திரைப்படங்கள் வசூல் ரீதியாக பல கோடி வசூல் செய்து விடும் என்பது தெரிந்த விஷயம் தான் இவர் ஆரம்ப காலகட்டத்தில் எஸ் ஏ சந்திரசேகரன் அவர்களிடம் உதவி இயக்குனராக பல திரைப்படங்களில் பணியாற்றி வந்தார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.

அதனைத் தொடர்ந்து ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார் ஆனால் இவர் திரைப்படங்கலை இயக்குவது மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் ஒரு சில காட்சிகளில் மட்டும் நடித்துள்ளார் அந்த வகையில் அவர் நடித்த திரைப்படங்களை பற்றி தான் நாம் தற்பொழுது பார்க்க உள்ளோம்.

இந்தியன்: இவரது இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்துவிட்டது இதில் ஷங்கர் ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் ஒரே ஒரு காட்சி மட்டும் நடித்து இருப்பார்.

வசந்த ராகம்: விஜயகாந்த் மற்றும் ரகுமான் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விட்டது சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தார்கள் என்று தான் கூற வேண்டும் இதில் பிரின்டிங் பிரஸ் வேலை பார்ப்பதுபோல் ஷங்கர் நடித்திருப்பார்.

சீதா: இந்தத் திரைப்படமும் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் ரகுமான்,கனகா, சரத்குமார் ஆகிய நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வசூல் செய்தது இப்படத்தில் ஒரே ஒரு சிறிய காட்சியில் மட்டும் இயக்குனர் ஷங்கர் நடித்துள்ளார்.

நண்பன்: இவர் இயக்கி விஜய் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை பெற்றுவிட்டது அஸ்க் அஸ்க் எனும் பாடலில் ஷங்கர் படத்தை இயக்குவது போல் ஒரு காட்சியில் நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவாஜி தி பாஸ்: ரஜினிகாந்த் நடிப்பில் விவேக் மற்றும் மணிவண்ணன் போன்ற பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று நல்ல விமர்சனத்தை பெற்றது என்று தான் கூற வேண்டும் மேலும் இதில் நயன்தாரா பல்லேலக்கா எனும் பாடலுக்கு நடனமாடி இருப்பார்.

shankar8
shankar8

அதில் சங்கர் மற்றும் கே வி ஆனந்த் ஆகிய இருவர்களும் மொபைல் போனை கேட்டு தூக்கி எறிவது போல் நடித்து இருப்பார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். இதனைத் தொடர்ந்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் சங்கர் இத்தனை திரைப்படங்களில் நடித்துள்ளார் என பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment