சம்பள விஷயத்தில் ராஜமௌலிக்கு டஃப் கொடுக்கும் இயக்குனர் சங்கர்.! கேம் சேஞ்சர் படத்திற்கு இத்தனை கோடியா?

கோலிவுடில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வந்துக் கொண்டிருக்கும் இயக்குனர் சங்கர் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்து வரும் நிலையில் தொடர்ந்து இவர் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களை இயக்கி வருகிறார். மேலும் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல திரைப்படங்களை இயக்கி வரும் நிலையில் இவருடைய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

கலவை விமர்சனங்களை பெற்றாலும் கூட நல்ல வசூலை ஈட்டி வருகிறது அந்த வகையில் தற்பொழுது இவர் தெலுங்கில் ராம் சரணை ஹீரோவாக வைத்து கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தினை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தினை தெலுங்கு பிரபல தயாரிப்பாளர் தினராஜ் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்க இருக்கிறார். இந்த படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இயக்குனர் சங்கர் தமிழில் கமலஹாசன் அவர்களை வைத்து இந்தியன் 2 படத்தினை உருவாக்கி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எனவே இந்த படமும் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் கேம் சேஞ்சர் படத்தினை இயக்குவதற்காக ஷங்கர் பல கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் கேம் சேஞ்சர் என்ற டைட்டிலுடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது. இந்த படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் கூறிய ஒரு வரியை வைத்து மொத்த கதையையும் சங்கர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இவ்வாறு ஷங்கர் ஹோலிவுட் சம்பளம் வாங்கும் இயக்குனராக இருந்து வரும் நிலையில் தற்போது டோலிவுட்டிலும் அதிக சம்பளம் வாங்க ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் இயக்குனர் ராஜமௌவுலி மட்டும் தான் 50 கோடிக்கு அதிகமாக சம்பளங்கள் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவருக்கு டஃப் கொடுக்கும் வகையில் தற்பொழுது இயக்குனர் சங்கர் கேம் சேஞ்சர் படத்தில் 50 கோடி சம்பளம் வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு கோலிவுட் மட்டுமல்லாமல் டோலிவுட்டிலும் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குனராக சங்கர் விளங்குகிறார்.

Leave a Comment