சம்பள விஷயத்தில் பிரம்மாண்ட இயக்குனரையே தலையை பிச்சுக்கொள்ள வைத்த பிரபல பாலிவுட் நடிகை..!

0

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என்று பெயர் போனவர்தான் இயக்குனர் ஷங்கர் இவர் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகாக தற்போது தன்னுடைய அடுத்த திரைப்படத்தை இயக்குவதில் பிஸியாக இருந்து வருகிறார் இந்நிலையில் பிரபல நடிகை ஒருவர் சம்பளத்தை வைத்து சண்டை பிடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 திரைப்படத்திற்கு பிறகு தெலுங்கில் ராம்சரணை வைத்து தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் முற்றிலுமாக முடிவடைந்த நிலையில் இவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகையை தேர்வு செய்து உள்ளார்கள்.

அந்த வகையில் அந்த பாலிவுட் நடிகை யார் என்று தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருந்து வந்த நிலையில் தற்போது உறுதியாகியுள்ளது அவர் கியாரா அத்வானி. ஆனால் அந்த நடிகை தற்போது தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி கேட்டு அடம் பிடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முதலில் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக நமது நடிகை 4.5 கோடி சம்பளத்தை கேட்டாராம். ஆனால் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் இவர் மிக பிரபலமான நடிகையாக இருந்தாலும் காரணமாக சம்பளத்தில் கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்க வில்லையாம் பின்னர் இவருடைய சம்பள விஷயத்தை எப்படியாவது பேசி முடியுங்கள் என சங்கர் ஒதுங்கிவிட்டார்.

இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் அவரிடம் ஒரு வழியாக பேசி 3.75 கோடிக்கு அவரை ஒப்பந்தம் செய்தார்கள். ஏனெனில் திரைப்படத்தில் நடிக்கும் நடிகை ஹிந்தி நடிகையாக இருப்பதன் காரணமாக இந்தியில் பிசினஸ் செய்வதற்கு மிகவும் வசதியாக இவை அமையும் என்ற காரணத்தினால் கியாரா அத்வானி விட்டுக்கொடுக்காமல் தயாரிப்பு நிறுவனம் அவரிடம் சமரசம் பேசி விட்டது.

kiyar athvani-1
kiyar athvani-1