இப்போது விவாகரத்து என்பது ட்ரெண்ட் ஆகிவிட்டது. அதிலும் பிரபலங்கள் நேரடியாக இதை சொல்லாமல் மறைமுகமாக எல்லோருக்கும் உணர்த்தும் வேலையில் இறங்கிவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.
இதைப் பார்த்து சம்பந்தப்பட்டவர்களின் ரசிகர்களும் நலம் விரும்பிகளும் குழம்பித்தான் போகின்றனர். அப்படித்தான் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. தனுஷின் அண்ணனும் இயக்குனருமான செல்வராகவன் தன் மனைவியை பிரிய போவதாக ஒரு தகவல் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதற்கு காரணம் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி தன் சோசியல் மீடியா பக்கத்தில் செல்வராகவனின் புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கி இருக்கிறார். இது போதாதா ஊர் வாய்க்கு கிடைத்த அவல் போல இப்போது இந்த விஷயத்தை தான் சோசியல் மீடியாவில் விவாதித்து வருகின்றனர்.
ஏனென்றால் பார்ட்னருடன் மன வருத்தம் அவரை பிரிய போகிறோம் என்றால் உடனே பிரபலங்கள் சோசியல் மீடியாவில் போட்டோக்களை நீக்கிவிடுகின்றனர். இதன் மூலம் சூட்சமமாக தங்களுடைய விவாகரத்து செய்தியை தெரிவிக்கின்றனர்.
அப்படித்தான் இதுவும் என இப்போது ரசிகர்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். ஆனால் செல்வராகவன் தன் சோசியல் மீடியா பக்கத்தில் மனைவியின் போட்டோக்கள் எதையும் நீக்கவில்லை.
இதனால் ஒரு குழப்பம் ரசிகர்களிடையே எழுத்து வருகிறது. இருப்பினும் இந்த தகவல் குறித்த அதிகாரப்பூர்வமான செய்திகள் வந்தால் மட்டுமே இந்த குழப்பம் நீங்கும்.