நீட் தேர்வை எவ்வாறு கையாள வேண்டும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய செல்வராகவன்.!!

0

director selvaragavan advice to student:கடந்த வாரம் நீட் நுழைவுத்தர்வுக்கு ஒருநாள் முன்னதாகவே நீட் தேர்வு எழுதுவதற்கு பயந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, அதனைத் தொடர்ந்து நீட்தேர்வு என்ற பெயரில் மாணவர்களை தொந்தரவு செய்ததாகவும்.

நீட் தேர்வு நடத்துவதன் மூலம் அரசாங்கத்திற்கு எதிராக சமூக வலைத்தளத்தில் பெரும் கண்டனம் தெரிவித்தார்கள் பலரும், அந்த அந்த நிலையில் தற்போது இயக்குனர் செல்வராகவன் தேர்வு அழுத்தத்தில் இருக்கும் மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

செல்வராகவன் கூறியதாவது தேர்வு முடிவுகள் வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை என்றும் தேர்வுகள் முக்கியமானதாக இருந்தாலும், தேர்வு முடிவுகளுடன் வாழ்க்கை முடியாது என்றும் மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தாலும் வாழ்க்கையில் ஆயிரக்கணக்கான வாய்ப்புகள் இருக்கு என்றும் மாணவர்கள் வலுவாக இருக்க வேண்டும் எனவும் அவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் டுவிட் செய்துள்ளார்.

அதேபோல் செல்வராகவன் இயக்கிய என் ஜி கே திரைப்படத்தில் நடித்த சூர்யா நீட் தேர்வு எதிர்ப்பு பற்றி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். செல்வராகவன் தன்னுடைய அடுத்த திரைப்படத்தை விரைவில் இயக்க இருக்கிறார் என தெரிகிறது.

அதுமட்டுமில்லாமல் செல்வராகவன் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து அருண் மாதேஸ்வரனின் சாணி கைதம் கோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.