செல்வராகவன் பிறந்தநாளுக்கு வித்தியாசமாக வாழ்த்து சொல்லிய கீர்த்தி சுரேஷ்.! சாணி காயிதம் படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டரை பார்த்து மிரண்ட சினிமா பிரபலங்கள்.

0

இயக்குனர் செல்வராகவன் இயக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் மிகப் பெரிய அளவில் வெற்றி பெறுவதால் அவரது திரைப்படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதோடு அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமும் வளரத் தொடங்கின.

அந்த ரசிகர்களுக்காக வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களையாவது கொடுத்து ரசிகர்களுக்கு தீனி போடுவது வழக்கம் ஆனால் சமீப காலமாக தனது தம்பி தனுஷ் மற்றும் வேறு யாரையும் வைத்து படங்களை இயக்காமல் சில ஆண்டுகளாக இருந்து வந்த செல்வராகவன் மீண்டும் முன்னணி பிரபலங்களை வைத்து படங்களை இயக்க முடிவு செய்துள்ளார் மேலும் பல படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

அந்த வகையில் இவர் நடிகை கீர்த்தி சுரேஷுடன் இணைந்து சாணி காயிதம் திரைப்படத்தில் நடித்துவருகிறார் திரைப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளிவந்தது பெரிய அளவில் வைரலானது அதிலும் செல்வராகவன் அழுக்கு லுங்கி கட்டிக் கொண்டு வலம் வருகிறார் இந்த நிலையில் தனது 44வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார் அப்பொழுது பல திரைப்பிரபலங்கள் இவருக்கு வாழ்த்து சொல்லியதோடு இவர் இயக்கும், நடிக்கும் படங்களுக்கும் வெற்றி பெற வாழ்த்து கூறினார்.

இந்த நிலையில் செல்வராகவன் நடிக்கும் சாணி காயிதம் திரைப்படக் குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது செல்வராகவனின் 44வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

அந்த போஸ்டரில் செல்வரகவன் ஒரு கையில் தம் மறுகையில் துப்பாக்கியை தூக்கி பிடித்து இருக்கும் இபோஸ்டர் நேற்று சமூக வலைதளப் பக்கத்தில் டிரெண்ட் ஆக மாறியது.

மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் பார்ட்னர் இன் க்ரைமுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி உள்ளார்.

இப்படி திரைப் பிரபலங்கள் வாழ்த்து கூறி அவரை சந்தோஷம் அடைய செய்து இருந்தாலும் அதைவிட வேறு ஒரு ட்ரீட்டு மிக சிறப்பாக அமைந்துள்ளது அது என்னவென்றால் இவர் இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு உருவான நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் பல வருடங்களாக வெளியே வராமல் இருந்து வந்த நிலையில் நேற்று பிறந்த நாளை முன்னிட்டு அந்தப் படமும் வெளியானது இந்த திரைப்படம் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று சிறப்பாக ஓடிக் கொண்டிருப்பதால் செல்வராகவன் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுள்ளார்.

மேலும் செல்வராகவன் மீண்டும் தனுஷுடன்  இணைந்து நானே வருவேன் ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய அடுத்தடுத்த ஹிட் படங்களை இயக்க உள்ளதால் ரசிகர்கள் மிகப்பெரிய ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.