திரைத் துறையில் சமீபகாலமாக பல மரண செய்திகள் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது அந்த வகையில் தற்பொழுதுஸ்டண்ட் மேன் ஒருவர் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் பா ரஞ்சித் தற்பொழுது வேட்டுவம் என்ற கேங்ஸ்டர் திரைப்படத்தை இயக்கி வருகிறார் இதில் ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அதேபோல் அட்டகத்தை தினேஷ் அவரும் நடித்து வருகிறார்.
அப்படி இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு சம்பவம் நடைபெற்றது அதாவது ஸ்டன்ட் கலைஞர் மோகன்ராஜ் என்பவர் திடீரென விபத்தில் சிக்கி உயிரிழந்தார் இது சினிமா துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது விபத்தில் சிக்கி எழுந்த மோகன்ராஜ் குடும்பத்திற்காக ரஞ்சித் அவர்கள் 20 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார் ஏற்கனவே நடிகர் சிம்பு அவர்கள் மோகன்ராஜ் குடும்பத்திற்காக ஒரு லட்ச ரூபாய் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்பொழுது பா ரஞ்சித் அவர்களும் 20 லட்சம் வழங்கி உள்ளது சினிமா கலைஞர்களுக்கு இடையே பெருமைப்பட வைத்துள்ளது.