விஜய் உடன் நடித்த நடிகையின் மகளுக்கு ஜோடியாகும் தளபதியின் மகன்.! இயக்குனர் போட்ட பக்கா பிளான்

90 கால கட்டத்தில் ஹோம்லி லுக்கில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் தான் நடிகை தேவயானி தற்பொழுது வயதான காரணத்தினால் ஹீரோயினாக நடிக்கவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல மவுசு இருந்து வருகிறது. மேலும் இவர் சின்னத்திரையில் தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் சீரியல்களில் நடித்து வருகிறார்.

இவர் சினிமாவில் முக்கிய இயக்குனரான ராஜகுமாரின் நான்கு படங்களில் நடித்திருக்கும் நிலையில் அவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த வகையில் இனியா, பிரியங்கா என்ற மகள்களும் இருக்கின்றனர். சமீபத்தில் தேவயானி மகள்கள் புகைப்படம் வைரலானது அதில் அவர்கள் அழகாக இருப்பது தெரிய வந்தது.

அந்த வகையில் அவருடைய மூத்த மகள் இனியா விரைவில் சினிமாவிற்கு ஹீரோயினாக என்ட்ரி கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் உடன் தான் இணைந்து நடிக்க இருக்கிறாராம். அந்த வகையில் இனியாவின் தந்தை இயக்குனர் ராஜ்குமார் சமீப பேட்டியில் தனது ஆசை குறித்து கூறியுள்ளார்.

அதாவது முதன்முதலாக தேவயானி வைத்து சூப்பர் ஹிட் பெற்ற படம் தான் நீ வருவாய் என இந்த படத்தில் முதலில் அஜித், விஜய் தான் நடிப்பதாக இருந்ததாம் ஆனால் விஜய் பிஸியாக இருந்து வந்ததால் பார்த்திபன் அஜித்துடன் நடித்து இருந்தாராம் எனவே முதல் பாகத்தில் விஜய் தான் நடிக்கவில்லை இரண்டாம் பாகத்திலாவது அவருடைய மகனை நடிக்க விடுங்கள் என்று அவரிடமே நேரடியாக கேட்கப் போகிறாராம்.

மேலும் நீ வருவாய் என 2 படத்தின் முழு ஸ்கிரிப்டும் ரெடி ஆகிவிட்டது அந்த ஸ்கிரிப்ட் இதுவரை 10 பேரிடம் சொல்லி இருப்பதாகவும் அந்த 10 பேரும் அவர்களை அறியாமலேயே கண்கலங்கி உள்ளனர். அந்த அளவிற்கு இந்த படம் மிகவும் உருக்கமான கதையாக இருக்கிறதாம். நீ வருவாய் என 2 படத்தில் இரண்டு ஹீரோக்கள் மற்றும் ஒரு இளம் நடிகை இருப்பதாக கதையை உருவாக்கி இருக்கும் நிலையில் இளம் நாயகியாக தன்னுடைய மகள் இனியா தான் நடிக்க போகிறார் இரண்டு நாயகர்களில் ஒருவர் விஜய்யின் மகன் சஞ்சய் மற்றும் 2வது கதாநாயகனாக இயக்குனர் விக்ரமனின் மகன் கனிஷ்கா விக்ரமன் என கூறிவுள்ளார்.

Leave a Comment