மூக்குத்தி அம்மனின் வெற்றியை தொடர்ந்து 220 கோடி பட்ஜெட் படத்தை இயக்கும் ஆர் ஜே பாலாஜி.!! எல்லாம் நயன்தாராவின் கைராசி போல..

சினிமா உலகில் காமெடியனாக அறிமுகமாகி பின்னாட்களில் ஹீரோவாகவும் இயக்குனராகவும் அடி எடுத்து வைத்து தமிழ் சினிமா உலகில் பன்முகத் தன்மை கொண்டவராக மாறி உள்ளவர் ஆர்ஜே பாலாஜி.

மேலும் தற்போது அவரே கதையை இயக்கி நடிக்கவும் செய்திருக்கிறார். அந்த வகையில் இவர் இயக்கத்தில் கடந்தாண்டு வெளிவந்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்தாலும் நல்ல வசூல் வேட்டை நடித்தியது. மேலும் இப்படம் ரசிகர்களுக்கு நல்ல தீனி போட்டது.

இதை தொடர்ந்து ஆர்ஜ் பாலாஜியின் அடுத்த படத்தை பெரிதும் எதிர் பார்த்து வந்த ரசிகர்களுக்கு தற்போது புதிய செய்தி ஒன்று கிடைத்துள்ளது அதாவது ஹிந்தியில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஒன்றை தமிழில் ரீமேக் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

வெறும் 29 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஒன்று வசூலில் 200 கோடிக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. அந்த திரைப்படத்தை இயக்குனர் ஆர் ஜே பாலாஜி ரீமேக் செய்ய உள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு தாறுமாறாக ஏறியது.

ஹிந்தியில் வெளியான பதாய் ஹோ படத்தையே தற்பொழுது ஆர்ஜே பாலாஜி  இயக்க முடிவெடுத்துள்ளாராம். இந்தப் படம் காமெடி அதிகமாக இருப்பதால் தமிழுலும் இது வெற்றி நடை போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version