பிரபல இயக்குனர் பிரவீன் காந்தி வடிவேலு அதிகமாக குடிப்பவர் என கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது வகைப்புயல் வடிவேலு 80,90 காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். தற்பொழுது வரையிலும் இவர்கென ஒரு அந்தஸ்து இருந்து வருகிறது.
மேலும் நகைச்சுவை மூலம் பிரபலமான இவர் தற்பொழுது வரையிலும் இவருடைய மீம்ஸ்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவ்வாறு நகைச்சுவை நடிகராக பிரபலமான வடிவேலு ஒரு கட்டத்திற்கு பிறகு ஹீரோவாக நடித்து வெற்றினை கண்டார் பிறகு செய்த சில காரணங்களினால் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.
அந்த வகையில் இவருடைய நடிப்பில் கடைசியாக நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் வெளியான நிலையில் கலவை விமர்சனத்தை பெற்று படும் தோல்வியினை அடைந்தது. இந்நிலையில் சினிமாவை தாண்டி அரசியலில் மிகவும் பிசியாக இருந்து வந்த இவர் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்த நிலையில் அதன் பிறகு இவருடைய சினிமா வாழ்க்கை தலைகீழாக மாறியது.
அந்த வகையில் பிரசாரத்தின் போது வடிவேலு விஜய் காந்தை பற்றி பேசியது பலரையும் வெறுப்பேற்றியது இதன் காரணமாக இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போன நிலையில் பிறகு ஹீரோவாக தான் நடிப்பேன் என முடிவெடுத்தார். எனவே இவருடைய மார்க்கெட் மொத்தமாக சரிந்தது இதனை அடுத்து ஷங்கர் மற்றும் வடிவேலுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் வடிவேலுக்கு ரெட் கார்ட் போடும் வரை சென்றது.
அதன் பிறகு வடிவேலு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்திற்கு பிறகு பல திரைப்படங்களை கை வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் ஜோடி, ராட்சசன் போன்ற திரைப்படங்களை இயக்கிய பிரவீன் காந்தி சமீப பேட்டி ஒன்றில் வடிவேலு விஜயகாந்த் குடிப்பார் என பேசினாரே வடிவேலு மட்டும் என்ன குடிக்க மாட்டாரா? வடிவேலுவும் தான் குடிப்பார் அவர் வடிவேலு இல்ல குடி வேலு என்றுதான் பலர் சொல்வார்கள் என இவர் பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதனை அடுத்து வடிவேலு ஒரு காட்சியை ஸ்பாட்டில் உருவாக்கும் வல்லமை படைத்தவர் அவரிடம் ஒரு லைனை சொன்னால் போதும் ஒரு காட்சியை உருவாக்கி விடுவார் என புகழ்ந்தும் பேசினார்.

