சமீபகாலமாக இளம் இயக்குனர்கள் தான் அதிகம் டாப் நடிகர்களின் படங்களை கைப்பற்றி நடித்து வருகின்றனர். அந்த வகையில் சினிமாவில் என்ட்ரி ஆன ஒரு சில படங்களிலேயே அதிகம் பிரபலமடைந்த இயக்குனர்கள் நெல்சன் திலிப்குமார், லோகேஷ் கனகராஜ், விக்னேஷ் சிவன், ஹச் வினோத் போன்ற இயக்குனர்கள் தான்.
அதிகம் தற்போது பேசப்பட்டு வருகின்றனர் இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து ஒளிபரப்பாகி வரும் திரைப்படம் விக்ரம். தமிழ் சினிமாவில் லோகேஷ் இதுவரை இயக்கிய நான்கு படங்களுமே சூப்பர் ஹிட் என்று தான் சொல்ல வேண்டும் அதனால் லோக்கேஷை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
ஆனால் விக்ரம் படம் வெற்றி அடைந்ததால் லோக்கேஷை பாராட்டி வரும் பட்சத்தில் இயக்குனர் நெல்சனை திட்டி தீர்த்து வருகின்றனர். சினிமாவில் கிட்டத்தட்ட ஒன்றாக தான் நெல்சனும் லோக்கேஷும் அறிமுகமானார்கள். இயக்குனர் நெல்சனின் கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்கள் நல்ல ஹிட்டடித்த நிலையில் கடைசியாக அவர் விஜய்யை வைத்து எடுத்த பீஸ்ட் படம்.
ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது ஆனால் படம் வெளிவந்து மிக மோசமான வரவேற்ப்பை பெற்று வந்தது இதனால் பலரும் நெல்சன் மேல் சற்று வருத்தத்தில் இருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர் அப்போது அந்த நிகழ்ச்சியின் மேடையில் பூஜா ஹெக்டே இருந்தபோது அவரை நடனமாட கூறியிருந்தனர்.
பூஜா ஹெக்டேவோ நெல்சனை கோர்த்து விட்டு அவரையும் மேடைக்கு வந்து நடனமாடும் படி கூறியுள்ளார். அதற்கு நெல்சன் என்னை இப்படி மாட்டி விட்டுடியே என சொன்னதற்கு தொகுப்பாளினி பிரியங்கா நீங்கள் யாரையாவது மாட்டி விடுங்கள் என சொன்னதற்கு நான் ஆல்ரெடி நல்லா மாட்டிக்கொண்டு தான் இருக்கேன் எனக் கூறியுள்ளார்.
எப்படி இருந்த மனுசன் @Nelsondilpkumar 💔 #Beast #Thalapathy66 pic.twitter.com/mf9Y6MwBqE
— 𝐀𝐫𝐮𝐧 𝐕𝐢𝐣𝐚𝐲 🔰 (@ArunVJ_VFC) June 10, 2022