தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஏ ஆர் முருகதாஸ் இவர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தை இயக்கியுள்ளார், அதுமட்டுமில்லாமல் பல நடிகர்களை முன்னணி நடிகராக உயர்த்தியதும் இவர்தான்.
இந்தநிலையில் ஏஆர் முருகதாஸ் அடுத்ததாக விஜயுடன் நான்காவது முறையாக கூட்டணி வைக்க இருக்கிறார், அதற்கு தற்காலிகமாக தளபதி 65 என பெயர் வைக்கப்பட்டுள்ளது, இந்த திரைப்படத்தின் முதற்கட்ட பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.
அப்படி இருக்கும் வகையில் முருகதாஸ் பற்றி ஏதாவது ஒரு அவதூறு செய்தி வெளியாகிக் கொண்டே இருக்கிறது, சமீபத்தில்கூட முருகதாஸ் பற்றி நடிகை ஸ்ரீ ரெட்டி மிகவும் மோசமான கருத்தை பதிவிட்டார், அதுமட்டுமில்லாமல் பல முன்னணி நடிகர் மற்றும் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் என அனைவரும் பட வாய்ப்பு தருவதாக கூறி பெண்களை படுக்கை அறைக்கு அழைத்து பயன்படுத்திக் கொள்கிறார்கள் என பெரும் குற்றச்சாட்டை வைத்தார்.
மேலும் மீண்டும் முருகதாஸ் அவர்களை வம்புக்கு இழுத்துள்ளார், ஸ்ரீ ரெட்டி கூறியதாவது முருகதாஸ்க்கு பெண்களின் கன்னித்தன்மையை திருடுவதும் பல திரைப்படங்களில் இருந்து கதையை ஆட்டையை போடுவதும் தான் ரொம்ப பிடிக்கும் என கூறியுள்ளார்.
இதற்கு முன் ஸ்ரீரெட்டி முருகதாஸ் மட்டுமல்லாமல் பல முன்னணி நடிகர் மற்றும் இயக்குனர்கள் என அனைவரும் மீது குற்றச்சாட்டை வைத்தார், ஆனாலும் ஸ்ரீரெட்டி அடிக்கடி வம்புக்கு இழுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
ஆனால் முருகதாஸ் இதுவரை எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார், மேலும் சமீபகாலமாக முருகதாஸ் மீது அடிக்கடி குற்றச்சாட்டு எழுந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.