பிரசாந்த் படத்திற்கு குட்பாய்!! இனி இந்த மாஸ் முன்னணி நடிகர் தான் மோகன்ராஜா அதிரடி.!

director mohanraja leave prasanth movie and joined with leading actor: தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் என பெயர் வாங்கியவர் தான் மோகன்ராஜா.இவர் தான் இயக்கிய தனி ஒருவன் திரைப்படத்திற்கு பிறகு தன்னுடைய ரேஞ்ச் தனி என நிரூபித்து விட்டார். அந்த அளவு தனி ஒருவன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் மோகன்ராஜா அடுத்ததாக சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் திரைப்படத்தை இயக்கினார் ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை, இந்த நிலையில் இயக்குனர் மோகன் ராஜா அடுத்ததாக பிரசாந்த் திரைப்படமான அந்தாதுன் என்ற திரைப்படத்தை ரீமேக் செய்ய முடிவெடுத்தார் என பல செய்திகள் வெளிவந்தது.

அதன் பிறகு அந்த படம் என்ன ஆனது என்று தெரியவில்லை,  பிரசாந்த் ஒரு காலகட்டத்தில் அஜித் , விஜய்க்கு டாப் கொடுத்த நடிகர். ஆனால் அவரின் துரதிர்ஷ்டவசமாக இந்த நிலைமையில் இருக்கிறார். எப்படியாவது விட்டதைப் பிடிக்க வேண்டும் என மிகவும் போராடி வருகிறார் பிரசாந்த்.

இந்தநிலையில் பிரசாந்தை வைத்து இயக்க இருந்த அந்ததுன் என்ற திரைப்படத்தை இயக்குவதிலிருந்து விலகிவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் மோகன்ராஜா பிரசாந்த் திரைப்படத்தில் இருந்து விலகியது ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்துள்ளது, எப்படி இருக்க அடுத்ததாக மோகன் ராஜா தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் லூசிபர் என்ற மலையாளத் திரைப்படத்தை ரீமேக் செய்ய இருக்கிறாராம்.

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகிய மரண வெற்றி பெற்ற திரைப்படம் தான் லூசிபர்.  இந்த திரைப் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment