சோழர் வரலாற்றை படமாக்க முயற்சி செய்யும் இயக்குனர் மோகன் ஜி.! வெளிவந்த மாஸ் தகவல்..

0
mohan-ji-1
mohan-ji-1

இயக்குனர் மோகன் ஜி சமீபத்தில் சோழர் வரலாற்றை படமாக்குவது குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் நிலையில் அந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான இவர் இதனைத் தொடர்ந்து திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை கூறும் படங்களை இயக்கி வருகிறார்.

அந்த வகையில் மேலும் சமூகத்திற்கு நல்ல கருத்தினை கூறும் வகையில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் சமீபத்தில் ஜிஎம் பிலிம் கார்ப்பரேஷன்  நிறுவனத்தின் மூலம் பகாசூரன் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது. இவ்வாறு இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் ஹீரோவாக நடித்திருந்த நிலையில் இவரை தொடர்ந்து நட்டு, ராதாரவி, ராஜன், ராம்ஸ் சரவணா, சுப்பையா, தேவதர்ஷினி, சசிலையா போன்றவர்களின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் தாராக்ஷி கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றினை பெற்ற நிலையில் ஜி.டி.எம் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கௌதம் இயக்குனர் மோகன் ஜிக்கு தங்க மோதிரம் மற்றும் ஐந்து லட்சம் மதிப்புள்ள வாட்சை பரிசாக அளித்தார். மேலும் பட குழுவினர்கள் கேக் வெட்டியும் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நடிகர் ரிஷி ரிச்சர்ட் அவர்கள் பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

mohan ji
mohan ji

இப்படிப்பட்ட நிலையில் இயக்குனர் மோகன் ஜி தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், சோழர் வரலாற்றில் நடந்த ஏதேனும் ஒரு சிறிய சம்பவத்தை சிறிய பொருட்ச அளவில் இரண்டு மணி நேரம் படமாக எடுக்க ஆசை.. வரலாற்று ஆவணங்களுடன் சேர்ந்த நிகழ்வு அல்லது கற்பனை கதையாகவோ உங்களிடம் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.. நிச்சயம் அதற்கான அங்கீகாரம் தரப்படும்.. Gmfilmcorporation@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.