14 வருடத்திற்கு முன்பே ஜீவாவின் படத்தில் நடித்துள்ள இயக்குனர் மாரி செல்வராஜ்.! அதுவும் இந்த காட்சியில் வைரலாகும் புகைப்படம்.!

0

கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக இயக்குனர் ராம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் மாரிசெல்வராஜ். இவர் சில வருடங்களுக்கு முன்பு பிரபல பத்திரிகையான ஆனந்த விகடன் நாளிதழில் ‘மறக்க நினைக்கிறேன்’ என்ற தொடரை எழுதியவர். அதுமட்டுமில்லாமல் ‘கொல்லப்படாதவர்கள்’ என்ற சிறுகதை தொகுப்பின் ஆசிரியர் இவர்தான்.

இப்படி பல திறமைகளை வெளிக்காட்டிய மாரிசெல்வராஜ் தமிழ் சினிமாவில் முதன் முதலாக பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக உருவெடுத்தார். தான் இயக்கிய முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதால் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உருவாக்கிக் கொண்டார். அதுமட்டுமில்லாமல் மாரிசெல்வராஜ் திரைப்படம் என்றாலே பார்க்கும்படி இருக்கும் என அனைவரும் மனதிலும் எழுந்தது.

இதனைத்தொடர்ந்து அடுத்ததாக முன்னணி நடிகரான தனுஷ் அவர்களை வைத்து கர்ணன் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது இந்த திரைப்படத்தின் வெற்றி இவரை சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது அதிலும் கர்ணன் திரைப்படத்திற்கு பிறகு கோலிவுட் வட்டாரத்தில் மாரி செல்வராஜ் என்ற பெயர் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

mari-selvaraj-in-kattrathu-tamil-movie-1
mari-selvaraj-in-kattrathu-tamil-movie-1

இந்தநிலையில் மாரிசெல்வராஜ் அடுத்ததாக விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்க இருக்கிறார். கபடி விளையாட்டு வீரரின் வாழ்க்கை வரலாறாக இந்த திரைப்படம் உருவாகும் என கூறப்பட்டுள்ளது அதுமட்டுமில்லாமல் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனவும் தகவல் வெளியானது மேலும் கர்ணன் திரைப்படத்தை பார்த்த விக்ரம் மாரிசெல்வராஜ் வீட்டிற்கு சென்று வாழ்த்து தெரிவித்தார்.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் தமிழ் நாடே கொண்டாடும் அளவிற்கு மாரிசெல்வராஜ் இயக்குனராக வலம் வந்தாலும் 2007 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியாகிய கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

mari-selvaraj-in-kattrathu-tamil-movie-1
mari-selvaraj-in-kattrathu-tamil-movie-1

தற்பொழுது பெரிய இயக்குனராக வலம் வரும் மாரி செல்வராஜ் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது இயக்குனர் ராம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பொழுது கற்றது தமிழ், தங்க மீன்கள், மற்றும் தரமணி ஆகிய திரைப்படங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.