வாரிசு திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் லோகேஷ் கொடுத்த விமர்சனம்.! உற்சாகத்தில் ரசிகர்கள்.

பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு. இந்த படத்தை வம்சி இயக்கி உள்ளார் தில் ராஜு மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில்  தயாரித்திருக்கிறார். படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக உருவாகியது என ஏற்கனவே படத்தில் நடித்தவர்கள் தொடங்கி..

தயாரிப்பாளர், இயக்குனர் என பலரும் கூறி வந்த நிலையில் ஒரு வழியாக வாரிசு திரைப்படம் இன்று அதிகாலை 4 மணிக்கு திரையரங்குகளில் வெளியானது படத்தை ரசிகர்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு படத்தை பார்த்தனர் படம் முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக அமைந்துள்ளது.

அதேசமயம் விஜய்க்கு ஏற்றார் போல காமெடி ஆக்சன் என அனைத்தும் சிறப்பாக இருப்பதாக படத்தைப் பார்த்த பலரும் சொல்லி வருகின்றனர் இருந்தாலும் அங்கங்கே கலவையான விமர்சனங்களும் தென்படுகின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் என்னும் படத்தை இயக்கி வெற்றி கண்ட இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வாரிசு படத்தின் முதல் நாள் முதல் ஷோ பார்த்துள்ளார்.

வெளியே வந்த அவர் வாரிசு திரைப்படம் குறித்து தனது கருத்தை கூறி உள்ளார் அதில் அவர் சொன்னது என்னவென்றால். ரொம்ப நாள் கழிச்சு நடிகர் விஜய் சாரை இப்படி பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. வாரிசு திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு திரைப்படமாக இருக்கும் அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை..

இனிவரும் காலங்களில் விஜயின் 67 படத்தின் அப்டேட் குறித்து தகவல்களை வெளியிடுவேன் என கூறி உள்ளார் இந்த செய்தியை அறிந்த தளபதி ரசிகர்கள் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வைரலாக்கியும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment