பிரபல நடிகருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட லோகேஷ் – தளபதி 67 படத்தில் இவரும் நடிக்கிறாரா.?

லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனர் இவர் முதலில் மாநகரம் என்னும் படத்தை இயக்கி அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார். மேலும் இவரது படங்களும் பெரிய அளவில் பேசப்பட்டன.

விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜயை வைத்து தளபதி 67 படத்தை எடுக்க உள்ளார் இந்த படத்திற்கான பூஜை  ஏற்கனவே போடப்பட்டது தற்பொழுது ஷூட்டிங்கும் தொடங்கியுள்ளதாக சில தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. தளபதி 67 படம் ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகும் என லோகேஷ் கனகராஜ் சொன்னார்.

அதனால் தளபதி 67 திரைப்படத்தில் ஏகப்பட்ட டாப் நடிகர்கள் வில்லனாக நடிக்க வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்பட்ட வந்த நிலையில்  அர்ஜுன், மிஷ்கின் என பலரும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க உள்ளார் என்ற தகவலும் கசிந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை..

இந்த சமயத்தில் தளபதி 67 படத்தில் நடிப்பதாக கௌதம் மேனன் மட்டும் உறுதியாக சொல்லி உள்ளார். இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிரபல டாப் நடிகர் ஜெயம் ரவியை சந்தித்து பேசி இருக்கிறார் இதுபற்றி ஜெயம் ரவிவிடம் சமீபத்தில் கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு லோகேஷ் என்னிடம் கதை கூறினார்.

அந்த கதை சிறப்பாக இருந்தது என ஜெயம் ரவி தெரிவித்தார் அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் மற்றும் ஜெயம் ரவி இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதை கேள்வி பட்ட ரசிகர்கள் லோகேஷ் கனகராஜ் சொன்ன கதையை ஒருவேளை தளபதி 67 ஆக இருக்கலாம் என கூறி பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

lokesh and jeyam ravi
lokesh and jeyam ravi

Leave a Comment