இயக்குனர் லோகேஷ் கைவசம் இருக்கும் புது படங்கள்.. மொத்தம் இத்தனையா.? ஆத்தாடி ஆத்தா..

தமிழ் சினிமாவில் குறைந்த படங்கள் எடுத்திருந்தாலும் அந்த படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி படங்கள் என்பதால் இயக்குனர் லோகேஷ் முன்னணி இயக்குனர்கள் லிஸ்டில் இடம் பிடித்துள்ளார் இவர் கடைசியாக கமலை வைத்து எடுத்த விக்ரம் படம் 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்று கண்டது.

அதனைத் தொடர்ந்து விஜய் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து “லியோ” திரைப்படத்தை எடுத்து வருகிறார் இந்த படம் முழுக்க முழுக்க பக்க ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி அல்லது ஒரு முக்கிய நாளில் லியோ திரைப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் கைவசம் இருக்கும்  திரைப்படங்கள் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் அண்மைக்காலமாக இயக்குவதையும் தாண்டி தயாரிப்பாளராகவும் திரை உலகில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகிறார் அதன்படி நெருங்கிய நண்பர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாக உள்ள ஒரு புதிய படத்தை..

லோகேஷ் தயாரிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெகு விரைவிலேயே வரும் என கூறப்படுகிறது அதனை தொடர்ந்து கைதி 2 திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எடுக்க இருக்கிறார். முதல் பாகம் உருவாக்கும் போதே கைதி 2 படத்தின் பாதி படப்பிடிப்பை எடுத்ததாக லோகேஷ் தெரிவித்துள்ளார்..

எனவே லியோ படத்தை தொடர்ந்து கைதி 2 படத்தை எடுக்க போவது உறுதியென கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.  அடுத்து இரும்பு கை மாயாவி மற்றும் விக்ரம் 2 இருக்கலாம் என ஒரு பேச்சு அடிபடுகிறது. இந்த படங்கள் எடுக்கப்படும் பட்சத்தில் லோகேஷின் சினிமா பயணம் இன்னும் உச்சத்தை தொடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment