தன்னுடைய அடுத்த படம் பற்றி அதிரடியாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார் லோகேஷ் கனகராஜ்.! ரசிகர்களே ரெடியா

0

director logeh kanagaraj next movie: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவிற்கு தரமான திரைப்படங்களை கொடுத்து வருபவர், இவர் இயக்கத்தில் வெளியாகிய மாநகரம் மற்றும் கைதி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பற்றி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து அடுத்ததாக விஜயை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது கொரோனா காரணமாக திரைப்படம் ரிலீஸ் தள்ளிப் போய்  கொண்டே போகிறது. இயல்புநிலை திரும்பிய பிறகு இந்த திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் யார் திரைப்படத்தை இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்தது, அதேபோல் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் இணைந்து நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக தகவல் கிடைத்தது அந்த திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இந்தத் திரைப்படம்தான் ரஜினிகாந்திற்கு கடைசி திரைப்படம் ஆக இருக்கும் எனவும் தகவல் வெளியானது.

ஆனால் லோகேஷ் கனகராஜ் இந்த திரைப்படத்தை இயக்குவதற்கு முன்பே கமல்ஹாசன் திரைப்படத்தை இயக்குவதற்காக திட்டமிட்டு இருப்பதாக பேசப்பட்டது, அதுமட்டுமில்லாமல் அடுத்த திரைப்படம் கைதி இரண்டாம் பாகமாக இருக்கும் எனவும் ஒரு தரப்பினர் கோரி வந்தார்கள்.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தான் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார். அதனால் ரசிகர்கள் ஆறு மணிக்கு  கொண்டாட்டத்திற்கு ரெடியாகி வருகிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் இந்த அறிவிப்புக்கு பல ரசிகர்கள் வாழ்த்து கூறி வந்தாலும் விஜய் ரசிகர்கள் மாஸ்டர் அப்டேட் கொடுங்கள் என கோரிக்கை வைத்து வருகிறார்கள்.