சிம்புவின் படத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் இயக்குனர் லிங்குசாமி – எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.!

காலத்திற்கு ஏற்றவாறு ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் போன்ற படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்விக்க இயக்குனர் லிங்குசாமி இதுவரை தமிழ் சினிமாவில் ஆனந்தம், சண்டக்கோழி, பையா, அஞ்சான் போன்ற வெற்றி படங்களை கொடுத்து அசத்தியுள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் லிங்குசாமி ராம் பொத்தேனி, கீர்த்தி ஷெட்டி, ஹாய் இவர்களை வைத்து தி வாரியர் என்னும் படத்தை லிங்குசாமி இயக்கி உள்ளார் இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது அதற்கு முன்பாக இந்த படத்தில் இருந்து வெளியான..

டிரைலர் மற்றும் புல்லட் பாடல் போன்றவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் அதிகரித்துள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் லிங்குசாமி படத்தின் சூட்டிங் தவிர..

மீதி நேரங்களில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகி வெற்றி கண்ட திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை தான் பார்த்துக் கொண்டிருப்பாராம். இந்த படத்தில்  சிம்பு மற்றும் திரிஷா இருவரையும் அவருக்கு ரொம்ப பிடிக்குமாம். மேலும் இந்த படத்தில் எழுதிய காதல் இசை பாடல் போன்ற அனைத்தும் அற்புதமாக இருந்தது.

தான் இயக்கும் தி வாரியர் படத்தை புதுப்பித்துக்கொள்ள விண்ணைத்தாண்டி வருவாயா படம் எனக்கு உதவியது இத்தனை வருடங்கள் ஆகிய பிறகும் விண்ணை தாண்டி வருவாயா படத்தில் எழுத்து இசை பாடல் காட்சி என அனைத்தும் சூப்பராக இருந்தது அது ஒரு மேஜிக் என தெரிவித்தார்.

Leave a Comment